Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.09 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Nov 11, 2024, 02:40 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 09 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் ஆனந்தம் உண்டாகும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் உங்களுக்கு ஆடைகளை பரிசாக வழங்கலாம். பணியிடங்களில் வேலை அதிகம் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியும் உழைப்பும் ஒரு சேர கிடைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனம் உறுதியாக இருக்கும். இந்த நாளில் சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுவது முக்கியம். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து, பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு கலகலப்பு நிறைந்த நாளாக இருக்கும். கலை அல்லது இசை துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டு.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு அலைச்சல்கள் நிறைந்த நாள். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். முன்னேற்ற பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாள். பேச்சில் இனிமை இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். குடும்பத்தில் அமைதியாக இருக்கவும், பேச்சால் பிரச்னைகள் வரலாம். கல்வி பணிக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அறிவுசார் வேலைகளில் ஆர்வம் கூடும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.