தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’பெண் மோகத்தால் செம அடி வாங்க போகும் மகரம்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!

’பெண் மோகத்தால் செம அடி வாங்க போகும் மகரம்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!

Kathiravan V HT Tamil

Nov 22, 2024, 08:39 PM IST

google News
ராகு கேது பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கார்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்க போகின்றது. வீடு, மனை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறைந்த அளவில் சம்பளம் பெற்று வந்தவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு வெகுமானம் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கார்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்க போகின்றது. வீடு, மனை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறைந்த அளவில் சம்பளம் பெற்று வந்தவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு வெகுமானம் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கார்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்க போகின்றது. வீடு, மனை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறைந்த அளவில் சம்பளம் பெற்று வந்தவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு வெகுமானம் கிடைக்கும்.

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.

மகரம் 

ராகு கேது பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கார்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்க போகின்றது. வீடு, மனை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறைந்த அளவில் சம்பளம் பெற்று வந்தவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு வெகுமானம் கிடைக்கும். ராகு பகவான் ஆசியால் உயர்வான இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த காலகட்டத்தில் தொட்டது துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். 

அதே வேளையில் ராகு பகவான் அதிகப்படியான காமம் மற்றும் போக சிந்தனையை தருவார் என்பதால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது முக்கியம். சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டால் 8ஆம் இட கேதுவால் தண்டனை நிச்சயம் கிடைக்கும். 

காதல் திருமணம் கைக்கூடும்!

தைரியம், வீரியம் அதிகரிக்கும் காலம் என்பதால் பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்களை சார்ந்தவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பலருக்கு மறைமுக வருமானம் மூலம் பெரும் ஆதாயம் உண்டாகும். 

சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும். சிறு தொழில் செய்பவர்கள் வணிகத்தை விரிவு செய்வீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றால் சிக்கல்கள் உண்டாகும். 

வீடு, மனை, வாகனத்தால் யோகம்!

தவறான பழக்க வழக்கங்களில் சிக்கி உள்ளவர்கள் அதில் இருந்து மீளுவீர்கள். கடன் மற்றும் கடன் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசு வழியில் புதிய வருமானங்கள் உண்டாகும். புதிய வீடு, வாகனம், மனைகளை வாங்குவீர்கள். புதிய முதலீடுகள் மூலம் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். தடைபட்ட பணவரவு மீண்டும் கிடைக்கும். 

எச்சரிக்கையும் பரிகாரமும்

அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. மக்கள் பணத்தில் கைவைத்தால் கடும் தண்டனை கிடைக்கும். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் உண்டாகும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

அடுத்த செய்தி