ராகு மற்றும் கேது அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.
ராகு மற்றும் கேது அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
ராகு கேது நவகிரகங்களின் நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர்.
(2 / 6)
ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானுக்கு பிறகு பக்தர்கள் அச்சப்படும் கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(3 / 6)
ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது இடத்தை மாற்றினார்கள். இந்த ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். தற்போது ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமை நல்ல முன்னேற்றம் அடையும். நிம்மதியான பெருமூச்சு விடுவீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து தடைகள் அனைத்தும் விலகும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் கேது அமைந்துள்ளதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்த போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிய வீட்டில் குடியுரிவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிரந்தர வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
(6 / 6)
சிம்ம ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல தைரியத்தை கொடுக்கப் போகின்றனர். நெருக்கமானவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருந்த நட்புறவுகள் உங்களைத் தேடி வரலாம். மாணவர்கள் எந்த குறையும் இருக்காது. மகிழ்ச்சி அதிகரிக்கும்.