தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!

புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil

Oct 13, 2024, 06:40 AM IST

google News
வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும்.
வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும்.

வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும்.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 2025ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அடுத்து வரும் மே 18 ஆம் தேதி மீன ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான், கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேது வந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். ஒரு ராசியில் நீண்டநாள் இருந்து தாக்கம் செலுத்தும் சனி பகவான், குரு பகவான், ராகு, கேது பகவான் ஆகியோரின் பெயர்ச்சி நடக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டு உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

சனி பெயர்ச்சி 

வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். ஊடகத்துறை, சினிமா, சின்னத்திரை, சாஃப்ட்வேர், இயற்கை விவசாயம், வேளாண் துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றம் பிறக்கும். தொழிலில் இருந்த போராட்டங்கள் சீராகி ஆனந்தம் தரும். 

கிரகங்களின் பார்வையால் மனதில் புதிய தெம்பும் புதிய உற்சாகமும் பிறக்கும்.  அதே வேலையில் ராசிக்கு 5ஆம் இடத்தை சனி பார்ப்பதால் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை, ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக படிக்க முயற்சி செய்ய வேண்டும். உடல்நலனில் இருந்த பாதிப்புகள் தீரும். வம்பு, வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்த இழுபறிகள் சீராகும். கைவிட்டு போன பூர்வீக சொத்துக்களை மீட்பீர்கள். வசூல் ஆகாத நிலுவைத் தொகைகள் மீண்டும் கிடைக்கும். 

குரு பெயர்ச்சி

உங்கள் ஜென்ம ராசியில் உள்ள குரு பகவான் 2ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவார். இதனால் தனம், குடும்பம், பேச்சில் செல்வாக்கு மற்றும் லாபம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படும். தடைபட்ட திருமணங்கள் பிரச்னை இன்றி முடியும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சுப விரையங்களுக்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். எந்த பிரச்னைகளும் இன்றி எளிதாக கடன் கிடைக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் உரிய அங்கீகாரம் கிடைக்கும். தள்ளி போன பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டாகும். 

ராகு-கேது பெயர்ச்சி 

ராகு பெயர்ச்சி மூலம் தொழில் வழியில் ஏற்றம் உண்டாகும். தொழில் வழியில் லாபம் பெருகி ஆனந்தம் தரும். புதிய தொழில் தொடங்கி நடத்துபவர்கள் சக்திவாய்ந்த அடித்தளத்தை அமைப்பீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி