தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bhagavan: சனீஸ்வரன் கோயில் தேரோட்டம் - மக்கள் வெள்ளத்தில் திருநள்ளாறு

Sani Bhagavan: சனீஸ்வரன் கோயில் தேரோட்டம் - மக்கள் வெள்ளத்தில் திருநள்ளாறு

May 30, 2023, 10:27 AM IST

google News
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.

நவக்கிரகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சனீஸ்வர பகவான். நீதிமானான சனீஸ்வர பகவான் மக்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். இவருக்கு மிகவும் விசேஷமான கோவில் காரைக்கால் அடுத்து உள்ள திருநள்ளாரில் அமைந்துள்ளது.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் கன்னி வரை.. நவம்பர் 18ஆம் தேதிக்குண்டான ராசி பலன்கள்.. உங்களுக்கு எப்படி இருக்கு

Nov 17, 2024 04:05 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.17 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 17, 2024 11:52 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.17 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 17, 2024 11:24 AM

கதவை தட்டும் சூரியன்.. பணத்தோடு அமைதியாக விளையாடும் ராசிகள் நீங்கதான்.. யாருக்கும் தெரியாது!

Nov 17, 2024 06:00 AM

‘நம்பிக்கையா இருங்க.. நல்லதே நடக்கும்.. அதிர்ஷ்டம் வரும்’ இன்று நவ.17 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 17, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவ.17 யாருக்கு அதிர்ஷ்டம்.. யாருக்கு சிக்கல் பாருங்க!

Nov 16, 2024 06:41 PM

உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை ஆயிரக்கணக்கான புத்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாகச் சனிப் பெயர்ச்சி தினத்தின் போது மூச்சு விட முடியாத அளவிற்கு இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அப்படி பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16ஆம் தேதி என்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தினமும் பல்வேறு விதமான அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.

பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாடு உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்திற்கு வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கோஷங்களுக்கு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் தேரோட்டத்தில் முன்னிட்டு வந்த நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை