தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மிதுனம் ராசிக்கு 10ஆம் வீட்டுக்கு வரும் சனி பகவான்! பணம் வந்து குத்தாட்டம் போடும்! சனி பெயர்ச்சி பலன்கள்!

மிதுனம் ராசிக்கு 10ஆம் வீட்டுக்கு வரும் சனி பகவான்! பணம் வந்து குத்தாட்டம் போடும்! சனி பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 06, 2024, 08:23 PM IST

google News
ராசிக்கு 10ஆம் வீட்டில் பாவி கிரகமான சனி பகவான் வருவது நன்மைகள் கிடைக்கும். தொழில்காரகன் ஆன சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வருவது புதிய வாய்ப்புகளையும் அனுகூலங்களையும் தரும். உங்கள் தொழிலும், வேலையும் மெதுவாக வளரத் தொடங்கும்.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். காலபுருஷனின் 3ஆம் வீடான மிதுனம் ராசிக்குள் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் அடக்கம். 

சமீபத்திய புகைப்படம்

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

பத்தாம் வீட்டுக்கு செல்லும் சனி பகவான்

நட்புக்கள், உறவுகள் மீது அதிக அன்பு வைத்துள்ள மிதுனம் ராசிக்காரர்களுக்கு இரட்டை குணங்கள் உண்டு. மிதுனம் ராசிக்கு 9ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் 10ஆம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். 

ராசிக்கு 10ஆம் வீட்டில் பாவி கிரகமான சனி பகவான் வருவது நன்மைகள் கிடைக்கும். தொழில்காரகன் ஆன சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வருவது புதிய வாய்ப்புகளையும் அனுகூலங்களையும் தரும். உங்கள் தொழிலும், வேலையும் மெதுவாக வளரத் தொடங்கும். 

அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு மார்ச் 29ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.  உடலிலும், மனதிலும் புத்துணர்வு பிறக்கும், நேர்மறை எண்ணங்களுடன் பிரச்னைகளை அணுகுவீர்கள். 

வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். வீடு, மனை, ஆடை, ஆபரண சேர்க்கைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தாயாரின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். 

சனி பகவானின் பார்வையும் பலன்களும்

சனி பகவான் 3ஆம் பார்வையாக 12ஆம் வீட்டை பார்ப்பதால் தூக்கத்தில் தொந்தரவுகள் ஏற்படும். 

சனி பகவான் 7ஆம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது முக்கியம்.

10ஆம் பார்வையானது 7ஆம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் கூடாது. 

வழிபாடுகளும் பரிகாரங்களும்!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கும் போது, தான தர்மங்களை செய்யும் போதும் சனி பகவானின் அருளை பெறலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி