ஏழரை சனியில் நுழையும் மேஷம்! உஷாரய்யா உஷாரு! மேஷம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்!
Nov 06, 2024, 07:40 PM IST
ஏழரை சனி காலத்தில் அவசர குணங்களை குறைப்பது முக்கியம். பொறுமை காக்க தவறினால் சிக்கல்களையும், அலைச்சல்களையும் சந்திக்க நேரிடலாம். பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் காரணமாக ஏழரை சனி பாதிப்பு மேஷம் ராசிக்கு தொடங்க உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
ஏழரை சனியும் எச்சரிக்கையும்
ஏழரை சனி காலத்தில் அவசர குணங்களை குறைப்பது முக்கியம். பொறுமை காக்க தவறினால் சிக்கல்களையும், அலைச்சல்களையும் சந்திக்க நேரிடலாம். பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகள் விரோதத்தை சம்பாதிக்க நேரிடலாம். இருக்கும் வேலையில் இருந்து ராஜினாமா செய்ய திட்டமிடுபவர்கள் தள்ளி போடுவது நல்லது. மற்றோரு வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
ரியல் எஸ்டேட், ஹோட்டல், காவல்துறை, அரசியல், மருத்துவம், விவசாயம், மொத்த வியாபாரம், இரும்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ள மேஷம் ராசிக்காரர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யக் கூடாது. குடும்பத்தினரின் ஜாதக நிலையை அறிந்து அவர்கள் பெயரில் வியாபரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சனி பகவானின் பார்வையும் பலன்களும்!
சனி பகவான் ஆனவர் மேஷம் ராசிக்கு இரண்டாம் இடமான ரிஷபம் ராசியை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். இரண்டாம் இடம் என்பது தனம் வாக்கு, குடும்பம் ஆகியவற்றை குறிக்கின்றது.
இதனால் பேச்சில் கவனம் முக்கியம், குடும்ப உறவுகளை கவனமாக கையாள வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் மிக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். புதிய முதலீடுகள் செய்யும் போது யோசித்து செய்வது நல்லது.
7ஆம் பார்வையாக 6ஆம் இடமான கன்னியை பார்ப்பதால் எதிரிகளை வெல்வீர்கள். 10ஆம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை அருகில் வந்து தள்ளி போகலாம். மிக நெருக்கமாக பழகுபவர்கள் எதிர்கலாக மாறுவர்.
வெளிநாடு செல்ல முயற்சிபவர்கள் அந்த முயற்சியை விடாமல் செய்வது நல்லது. இதனால் சனி பகவானின் தாக்கம் குறையும். உங்கள் ஜனன கால ஜாதகத்தில் சனி சுபத்துவம், வக்ரம், நீசம் பெற்று இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வழிபாடும் பரிகாரங்களும்!
உங்களால் முயன்ற அளவுக்கு தான தர்மங்களை மேஷம் ராசிக்காரர்கள் செய்வது ஏழரை சனி பாதிப்பில் இருந்து மீள வழிவகுக்கும். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.