Aadi Thabasu: மூன்று தெய்வங்களின் அருளாசி கிடைக்கும் நாள் ஆடித்தபசு!
Aug 01, 2023, 07:00 AM IST
ஆடி தபசு திருநாளின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தமிழ் மாதம் ஒவ்வொன்றும் இறைவனுக்கு வழிபாட்டுக்குரிய மாதமாகக் கருதப்படுகிறது. அப்படி தெய்வீக மாதமாக விளங்கக்கூடிய ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் அனைத்து அம்மன் கோயில்களிலும் திருவிழாக்கோலம் தான்.
சமீபத்திய புகைப்படம்
இந்த மாதத்தில் அம்மன் சிவபெருமான் மற்றும் பெருமாளை ஒரு சேர தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டு தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் வழிபாடு செய்தால் மூன்று தெய்வங்களின் அருள் ஒரு சேர கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த மூன்று தெய்வங்களின் அனுக்கிரகம் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும் எனக் கூறப்படுகிறது. சிவபெருமான் நமது வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும் நீக்கக்கூடியவர்.
காக்கும் கடவுளாக விளங்கக்கூடிய விஷ்ணு நமது வாழ்வில் மகிழ்ச்சியை வாரிக் கொடுப்பவர். சக்தியாக விளங்கக்கூடிய அம்பாள் நமது வாழ்க்கையில் இல்லாததை நம்மிடம் கொடுக்கக் கூடியவர். அப்படி இந்த மாதத்தில் வழிபாடு செய்து மூன்று தெய்வங்களின் அருளையும் பெறலாம்.
அப்படி வழிபாடு செய்யக்கூடிய சிறப்பு நாளாகக் கருதப்படுவது இந்த ஆடித்தபசு. அதனால்தான் இந்த நாள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவிலில் இந்த ஆடி தபசு வழிபாடு விழா மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்படும்.
வீட்டைச் சுற்றி அல்லது வீட்டுப் பகுதிகளில் பாம்பின் நடமாட்டம் மிகவும் அதிகமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தால், சங்கரன்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு அங்கே கொடுக்கும் புற்றுமண்ணைக் கொஞ்சம் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வாசல் பகுதியில் கட்டி தொங்க விட்டால் அங்குப் பாம்பின் நடமாட்டம் இருக்காது எனப் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த திருக்கோயிலில் கோமதி அம்மன் என்ற பெயரில் அம்பாள் தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு ஆடி தபசு திருநாளன்று சென்று வழிபாடு செய்தால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் சிவபெருமானும், பெருமாளும் இணைந்து சங்கரநாராயணனாகக் காட்சி தருகின்றனர். ஆடி தபசு திருநாளன்று பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் ஆடித்தபசு திருவிழா வெகு விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் வந்து தங்களது வழிபாடுகளைச் செய்வார்கள்.
அப்படி பல்வேறு விசேஷங்களைக் கொண்ட இந்த ஆடி தபசு திருநாளில், சங்கரன்கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் அருகில் இருக்கக்கூடிய சிவன், விஷ்ணு, அம்பாள் என எந்த தெய்வத்தின் கோயிலாக இருந்தாலும் சென்று வழிபாடு செய்யலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்