ராகு ஏழரை ஸ்டார்ட்.. 2025 கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. கஷ்டத்தில் உறைந்து போகப்போவது யார்?
Nov 08, 2024, 12:34 PM IST
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று ராகு பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மீன ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. உடல் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாக இருக்கும். சேமிப்பு அதிகமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதிநிலைமைகள் ஏற்றம் மற்றும் இறக்கங்கள் இருக்கக்கூடும். வாழ்க்கையில் மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடக ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குடும்பத்தில் திட்டமிட்ட வேலைகள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தீவிரமான சூழ்நிலைகள் இருக்கும். பொழுது பொறுமையாக முடிவெடுப்பது மிகவும் நல்லது. மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக உங்களுக்கு பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேஷ ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது. மன ஆரோக்கியத்தில் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். வருமானத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் பல்வேறு விதமான கஷ்டங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.
எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். எதிர்பார்த்ததை விட செலவுகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு பல்வேறு விதமான கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.