Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார் இவர் தைரியம், விடாமுயற்சி, வலிமை, துணிவு தன்னம்பிக்கை உள்ளிட்டவை களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசியில் நுழைந்தார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 6)
செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய மகர ராசி பெயர்சியால் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு மங்களகரமான பலன்களை அள்ளிக் கொடுக்க போகின்றார். சுப பலன்களை உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும்.