HT Yatra: வணிகர்கள் வழிபட்ட சிவன்.. மண்ணில் புதைந்த கோயில்.. சிவபெருமானை மீட்ட பல்லவ மன்னன்
Jun 14, 2024, 06:40 AM IST
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வரக்கூடிய ஒரு திருக்கோயில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக விளங்கக்கூடிய இந்த கைலாசநாதர் திருக்கோயில் பல்வேறு தோஷங்களை நீக்கும் நிவர்த்தி தலமாக திகழ்ந்து வருகிறது.
Lord Shiva: கடவுள்களுக்கெல்லாம் இறைவனாக விளங்க கூடியவர் சிவபெருமான் உலகம் முழுவதும் இவருக்கு பக்தர்கள் கூட்டம் உள்ளது அதே சமயம் உலகம் முழுவதும் இவருக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைக்கன உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியாக அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
காலம் கடந்து வாழும் இறைவனாக ஆதி அந்தம் என பல புலவர்கள் இவரை வாழ்த்தி பாடியுள்ளனர்.. முதலும் முடிவும் தெரியாத இறைவனாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் தனக்கென கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தவர்.
மன்னர்கள் போரிட்ட காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. சிவபெருமான் மீது தங்களுக்கு உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே அந்த காலத்தில் மன்னர்கள் தங்களது கலை நயங்களை வெளிப்படுத்தி சிவபெருமான் கோயில்களை கம்பீரமாக கட்டி வைத்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்று வரை அசைக்க முடியாமல் கம்பீரமாக அந்த கோயில்கள் திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. அதற்கு மிகப்பெரிய முக்கிய சான்றாக விளங்க கூடியது தஞ்சை பெருவுடையார் திருக்கோயில். மிகப்பெரிய ராஜாவாக விளங்கிய ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் அதுதான்.
அந்த வகையில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வரக்கூடிய ஒரு திருக்கோயில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக விளங்கக்கூடிய இந்த கைலாசநாதர் திருக்கோயில் பல்வேறு தோஷங்களை நீக்கும் நிவர்த்தி தலமாக திகழ்ந்து வருகிறது.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் மூன்று கணபதியின் தரிசனத்தை நாம் காண முடியும். பிரகாரத்தில் வடக்கு திசை நோக்கி குபேர கணபதி காட்சி கொடுப்பார். அதற்கு பிறகு சன்னதியில் விஜய கணபதி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த விஜய கணபதி வழிபட்டால் கல்வி மற்றும் தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதற்குப் பிறகு சிவபெருமான் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி காட்சி கொடுத்து வருகிறார். இவர்கள் மூவருக்குமே விநாயக சதுர்த்தி திருநாளில் மிக விமர்சையாக வழிபாடுகள் நடத்தப்படும்.
அருள்மிகு கனகவல்லி தாயார் பெண்களின் துன்பங்களை போக்குவதற்காக இந்த கோயிலில் காட்சி கொடுத்து வருகிறார். பெண்களின் மாங்கல்ய தோஷத்தை போக்குவதும், திருமண தடையை போக்குவதும் இந்த அம்பாளின் தனிப்பட்ட அனுக்கிரகம் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த திருக்கோயில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய கோயிலாக பார்க்கப்படுகிறது இந்த கோயில் குறித்த செய்தி குறிப்புகள் லிங்கத்தின் ஆவுடையாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தல வரலாறு
இந்த பகுதியில் பல கடல் வணிகர்கள் வசித்து வந்துள்ளனர். கடல் பயணத்தை பற்றி நாம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. கடுமையான பயணமாக கட்டாயம் இருக்கும். தங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், தொழில் விருத்தி பெறுவதற்காகவும் சிவபெருமானுக்கு என அந்த வணிகர்கள் தனி கோயில் அமைத்து வழிபாடு செய்துவந்துள்ளனர்.
அதற்குப் பிறகு காலப்போக்கில் கடல் சீற்றத்தால் அந்த கோயில் மறைந்து விட்டது. பின்னர் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்து வந்துள்ளார். சிவபெருமானுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என அவர் நினைத்துள்ளார். இதுகுறித்து பணிகளை துவங்கி நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அவரது கனவில் தோன்றி சிவபெருமான் அழிந்து போன கோயில் ஒன்றில் எனது லிங்கம் மண்ணுக்கடியில் மறைந்து கிடக்கிறது என சுட்டிக்காட்டி உள்ளார். அதற்குப் பிறகு பல்லவ மன்னன் அங்கு இருந்த லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து கைலாசநாதர் என பெயரிட்டு வழிபாடு செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9