2025 ஜூலையில் வக்ரம் பெறும் சனி பகவான்! 4 ராசிகளுக்கு ஆப்பு! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
Nov 08, 2024, 03:58 PM IST
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று காலை 09:36 மணிக்கு, மீனம் ராசியில் உள்ள சனி பகவான் வக்ரநிலை பெற்று பின்னோக்கி செல்ல உள்ளார். 2025ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆகிறார். சனி பகவானின் வக்ர நிவர்த்தி காலம் 138 நாட்கள் ஆகும்.
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
சனி பெயர்ச்சி 2025
2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்கள் ஏழரை சனி பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுகின்றனர். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி விலகி பாதசனி தொடங்குகின்றது. மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கார்களுக்கு விரைய சனி பாதிப்பும் உண்டாகின்றது.
இதற்கு பிறகு 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று காலை 09:36 மணிக்கு, மீனம் ராசியில் உள்ள சனி பகவான் வக்ரநிலை பெற்று பின்னோக்கி செல்ல உள்ளார். 2025ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆகிறார். சனி பகவானின் வக்ர நிவர்த்தி காலம் 138 நாட்கள் ஆகும்.
சனியின் வக்ர நிலையின் தாக்கம்
ஜோதிடர் பண்டிட் நரேந்திர உபாத்யாயின் கூற்றுப்படி, சனி தனது கும்ப ராசியிலிருந்து வெளியேறி, குரு பகவானுக்கு உரிய மீனத்தில் மார்ச் 29ஆம் தேதி நுழைகிறார். பிறகு சனி தனது இயக்கத்தை மாற்றிக் கொள்வார். அப்படிப்பட்ட நிலையில் சனி அந்த நேரம் மேஷம் ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும் நேரம் ஆகும். ரிஷபம், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்கும் அனுகூலங்கள் கிடைக்கும்.
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உண்டாக்கும் சிக்கல்களின் தாக்கம் சற்று குறையும். ஆனால் அதே நேரத்தில் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனி பகவானின் அசுப பலன்களை சந்திக்க வேண்டி இருக்கும். மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு உடல்ரீதியிலான பிரச்னைகள் உண்டாகும். கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ரநிலையால் மன உளைச்சல் ஏற்படலாம். சிம்ம ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் ஏற்ற இறக்கங்கள் வந்து போகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.