Janmashtami: கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட ரெடியா? கோகுலாஷ்டமி பூஜைக்கு உகந்த நேரம் எது தெரியுமா? இதோ முழு விவரம்!
Aug 21, 2024, 10:19 PM IST
Janmashtami: பகவான் கிருஷ்ணர் பிறந்தது பாத்ரபத மாத அஷ்டமி திதியில் என்று கூறப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் பிறந்த காலத்தில் இருந்த ஜென்மாஷ்டமி அன்று பல யோகங்கள் இம்முறை உருவாகின்றன.
நாடும் முழுவதும் வரும் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் ஜென்மாஷ்டமி என்ற பெயரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.
சமீபத்திய புகைப்படம்
கிருஷ்ணர் தன் வாழ்நாளில் பல தீய சக்திகளை வென்று, நன்மையை நிலைநிறுத்தியவர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், நன்மையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் கோயில்களில் கிருஷ்ணனின் பிறப்பிடமான கோகுலத்தைப் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு உறி அடிப்பது உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்.
பகவான் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்தார் என்பது ஐதீகம். இம்முறை கிருஷ்ணர் பிறந்த காலத்தில் இருந்த ஜென்மாஷ்டமி அன்று இது போன்ற பல யோகங்கள் உருவாகின்றன. அதில் ரோகிணி நட்சத்திரம் முதலிடம் பெறுகின்றது.
ஜென்மாஷ்டமி நாளில் வீட்டில் கிருஷ்ணரின் விக்ரகத்தை வைத்து லட்டு, சீடை, இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்ட படையல்கள் உடன் பஜனை பாடல்களை பாடி வழிபாடு செய்வது வீட்டில் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி தேதி மற்றும் நேரம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமி எப்போது?
ஆகஸ்ட் 26, 2024 திங்கள் கிழமை
நிஷிதா பூஜை நேரம்- மதியம் 12:01 முதல் 12:45 வரை
27 ஆகஸ்ட் 2024
மதியம் 12:45க்குப் பிறகு
• அஷ்டமி திதி ஆரம்பம் - காலை 03:39, 26 ஆகஸ்ட் 2024
• அஷ்டமி திதி முடிவடைகிறது- 02:19 காலை, 27 ஆகஸ்ட் 2024
•ரோகிணி நட்சத்திரம் ஆரம்பம் - 03:55 பிற்பகல், 26 ஆகஸ்ட் 2024
•ரோகிணி நட்சத்திரம் முடிவடைவது- 03:38 PM, 27 ஆகஸ்ட் 2024.
டாபிக்ஸ்