தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (10.05.2024): அட்சய திருதியை நாளில் யாருக்கு செல்வாக்கு உயரும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (10.05.2024): அட்சய திருதியை நாளில் யாருக்கு செல்வாக்கு உயரும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

May 10, 2024, 05:35 AM IST

Today Rasipalan, Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 10) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan, Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 10) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan, Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 10) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

மேஷம்

உறவினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான புதிய ஆலோசனைகள் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.

மிதுனம்

இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் நிதானம் வேண்டும்.

கடகம்

சிந்தனைகளின் மூலம் புதிய தெளிவுகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செல்வாக்கு உயரும்.

சிம்மம்

கற்றல் திறனில் சில புதுமைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். 

கன்னி

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

துலாம்

பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். அரசு பணிகளில் சில விரயம் உண்டாகும்.

விருச்சிகம்

நிதானமான செயல்பாடுகள் வெற்றியை உண்டாக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சி ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். பிடிவாத போக்கினை குறைத்து சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

மகரம்

புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

கும்பம்

பயணங்களால் புதிய அனுபவம் மேம்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். மருத்துவத்துறையில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி