தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (07.05.2024): கவலை வேண்டாம்.. இந்த நாள் சூப்பரா? சுமாரா? ..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (07.05.2024): கவலை வேண்டாம்.. இந்த நாள் சூப்பரா? சுமாரா? ..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

May 07, 2024, 05:43 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 07) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 07) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 07) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

மேஷம்

வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்

கவனம் வேண்டும் தேவை. குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம்

உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக வியாபாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

தடைபட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகளின் மத்தியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கன்னி

வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

துலாம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். பிற மத மக்களின் உதவி கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

உறவினர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில சரக்குகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

தனுசு

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.

மகரம்

அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.

கும்பம்

பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்

சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி