தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (02.05.2024): 'புதிய நம்பிக்கை பிறக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (02.05.2024): 'புதிய நம்பிக்கை பிறக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

May 02, 2024, 05:45 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 02) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 02) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 02) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

Love Horoscope Today : உறவில் உள்ள அன்பு ஒருபோதும் குறைய விடாதீர்கள்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு

May 16, 2024 08:37 AM

Today Horoscope : ‘மூலதனம் முக்கியம்.. வீண் செலவுகளை தவிர்க்கவும்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 16, 2024 06:23 AM

உடலுறவில் அதிக ஆர்வம் காட்டும் ராசிகள் இவர்கள் தானாம்.. காதல் கிரகம் சுக்கிரனால் ஆளப்படுவீர்கள்-ஜோதிடம் என்ன சொல்கிறது?

May 16, 2024 06:00 AM

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. குபேர யோகம் வருகுது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

May 15, 2024 05:44 PM

கண்ணீரில் கதறும் ராசிகள்.. குரு சுக்கிரன் அஸ்தமனக் கூட்டணி.. சிக்கி சிதைய போகும் ராசிகள்

May 15, 2024 05:35 PM

ஜூன் பணமழை.. புதன் புதையலோடு வருகிறார்.. ஓஹோன்னு வாழப் போகும் ராசிகள்.. பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்

May 15, 2024 05:26 PM

மேஷம்

உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும்.

கடகம்

மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் கேலி பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும்.

கன்னி

சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும்.

விருச்சிகம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும்.

தனுசு

திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். .

மகரம்

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும்.

மீனம்

குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். விமர்சன பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய சிக்கல்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி