கடன் தொல்லையா? - கவலையை விடுங்க தோரண கணபதி இருக்கார்!
Sep 22, 2023, 06:20 AM IST
Thorana Ganapathi Temple: சென்னை குன்றத்தூர் காத்யாயினி கோயிலில் உள்ள தோரண கணபதியை வழிபட்டால், துரத்தும் கடனில் இருந்து விடுபடலாம்.
கணபதி வழிபாடு கைமேல் பலன் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நமது விநாயகர் வழிபாட்டால் கவலைகள் யாவும் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப் பேறு உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித்தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும்.
சமீபத்திய புகைப்படம்
ஆலயங்களின் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால் சகல தெய்வங்களின் அருளும் ஒருங்கே கிடைக்கும் என்கிறது புராணங்கள். அந்த வரிசையில், ஸ்ரீதோரண கணபதியை வணங்கி வழிபட்டால் கடன் தீரும். இதைத்தான் கைமேல் பலன் என்கிறார் அவ்வை.
யார் இந்த தோரண கணபதி? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?
அம்மன் கோயில்களில் தோரணவாயில் அருகே அருள் பாலிப்பவர் தோரண கணபதி. அந்தவகையில், சென்னை குன்றத்தூர் காத்யாயினி கோயிலில் உள்ள தோரண கணபதியை வழிபட்டால், துரத்தும் கடனில் இருந்து விடுபடலாம். தலையில் ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேல் இரு கரங்களில் அங்குசமும் பாசமும், கீழ் இரு கைகளில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு காட்சி தருகிறார் ஸ்ரீதோரண கணபதி.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய், ஞாயிறு அன்று தீபமேற்ற தன்கையில் உள்ள தந்தத்தை கொண்டு அவர்களது கடன் தீர ஆசி வழங்குவார். தோரண கணபதியை வழிபடும் போது தோப்புக்கரணம் இடுவது அவசியமானது. இவருக்கு பிடித்த பிரசாதங்கள் படைத்தும் வழிபடலாம். அருகம்புல் மாலை சாற்றுவது உத்தமம். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
எப்படி செல்வது?
சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வாலயம். தாம்பரத்தில் இருந்து 16 கி.மீ பயணித்தால் கோயிலை அடையலாம். பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி, சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்களில் தோரண கணபதிக்கு சன்னதி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்