Kalayar Kovil: பூர்வ ஜென்ம புண்ணியம் தரும் காளையார் கோயில்
Oct 31, 2022, 08:48 PM IST
சிவகங்கை காளையார் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காளையார் கோயில். பெயருக்கு ஏற்றார் போல் இங்கு அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயம் ஆனது வரலாற்று சிறப்புமிக்க சிவ ஆலயங்களை ஒன்று.
சமீபத்திய புகைப்படம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மும்மை சிறப்புகளை கொண்டது. அருள்மிகு சௌந்தரவல்லி அம்மாள் சோமேஷர், அருள்மிகு சொர்ணவள்ளி அம்பாள் சவேத காளீஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மாள் சபை என்று மூன்று முக்கிய திருக்கோவில்களை ஒன்றாக்கி உள்ளடக்கியது சொர்ண காளீஸ்வரர் கோயில்.
மூன்று லிங்கத் திருமேனிகளை தனித்தனி கருவறைகளாகக் கொண்டு மூன்று சிவாலயங்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்ட திருத்தலம் இது. பெரிய ராஜகோபுரத்தின் முன்னிலையில் காட்சி தரும் அருள்மிகு சோமேசர், பிரம்மா, சந்திரன், குபேரன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவரது வலதுபுறம் அன்னை சௌந்தரவல்லி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இந்திரனால் வழிபட்ட சகஸ்திர லிங்கமும் உள்ளது. சன்னதிக்கு வலது புறம் இரு பிரகாரங்களை உள்ளடக்கிய ஆன்மீக சொர்ணவள்ளி அம்மன் சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ள ராஜகோபுரமானது 152 அடி உயரத்தில் முத்து வடுகநாதரை நினைவாக மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது. இங்கு தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்றும் மனநோய் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.