Vazhi Thunai Nathar: பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்க்கும் வழித்துணை நாதர்!
Nov 13, 2022, 06:28 PM IST
ஜெயங்கொண்டம் அருள்மிகு வழித்துணை நாதர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் கிராமத்தில் ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை வழித்துணை நாதர் திருக்கோயில் அமைத்துள்ளது ராஜகேஸ்வரி சுந்தர சோழனால் கட்டப்பட்ட இந்த கோயிலில் மூலவர் வழித்துணை நாதர் சன்னதிக்கும் அடுத்த சன்னதியில் சுற்று பிரகாரத்தில் மரகதவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. கோயிலின் சுற்றுப்புற காலத்தில் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் சிலைகள் அமைத்துள்ளன. தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கஜலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சனீஸ்வர பகவான் ஆகிய பரிவார தெய்வங்கள் அமைத்துள்ளன.
நவக்கிரகங்களில் இருக்கும் சனீஸ்வர பகவான் இந்த கோயிலில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். கோயிலின் சுற்றுப்பயதாரத்தில் அரளி, பவளமல்லி, மல்லிகை, எலுமிச்சை, தென்னை, பூச்செடிகள் அமைந்த நந்தவனம் அழகுற காட்சி அளிக்கிறது.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள், நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள் ஆகியோர் மூன்று முறை ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை வழித்துணை நாதர் திருக்கோயிலுக்கு வருகை தந்து பக்தி பிறப்புடன் வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.
மேலும் போதிய பராமரிப்பு இன்றி காணப்படும் இந்த கோயிலை சீரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து அணைக்குடம் வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணம் வழியாக 5 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை வழித்துணை நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.