தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஷ்வரர் சிறப்புகள்!

திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஷ்வரர் சிறப்புகள்!

Jun 09, 2022, 01:19 PM IST

google News
திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஷ்வரர் திருக்கோயில் தல வரலாறு குறித்து காண்போம்.
திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஷ்வரர் திருக்கோயில் தல வரலாறு குறித்து காண்போம்.

திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஷ்வரர் திருக்கோயில் தல வரலாறு குறித்து காண்போம்.

விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த திருவாமாத்தூர் அடையலாம். விநாயகருக்கு என்று அமைந்த அழகிய கோயில் இது. இங்கே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஆனைமுகப் பெருமான்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

சன்னதி கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பெருமானைத் தரிசிக்கலாம். கோஷ்டத்தில் அடுத்து லிங்கோத்பவர் சன்னிதி பரமன் உள்ளது. பெருமான் அடி முடி காணத் திருமாலும், பிரம்மனும் சென்றதை விளக்கும் லிங்கோத்பவ வடிவைத் தரிசிக்கலாம். கருவறை கோஷ்டத்தில் நான்முகக் கடவுளான ஸ்ரீ பிரம்மா நின்றகோலத்தில் திகழ்கிறார்.

தனிச்சன்னிதியில் கையில் உடுக்கை சூலம் ஏந்தி கால பைரவர் காட்சி தருகிறார். அடுத்து அன்னை மரகதாம்பாள் தனிச்சன்னிதியில் இருபுறமும் துவாரபாலகியர்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். விநாயகர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். 

தல வரலா

ஒற்றைக் கல்லில் அமைந்தவர் இந்த விநாயகப் பெருமான். இந்த ஊருக்கு ஆமாத்தூர் என்று பெயர் வந்ததே பசுமை வைத்துத்தான். முன்னொரு காலத்தில் பசுக்களெல்லாம் கொம்புகள் இல்லாமல் படைக்கப்பட்டு இருந்தனவாம். 

தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற பசுக் கூட்டங்களும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கொம்புகள் வேண்டும் என நந்திதேவரிடம் முறையிட்டனவாம்.

அதற்கு நந்தியம்பெருமான் பம்பை நதிக்கரையில் உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் வணங்கி, வழிபடும் படி கூறினாராம். அவ்வாறு பசுக்கள் தவம் செய்து வணங்கி வழிபட்டு கொம்புகளைப் பெற்ற தலம் என்பதால் இது திரு ஆமாத்தூர் எனப்படுகிறது.

முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கே சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ மதுரை நாதிஸ்வரர் அழகிய அலங்காரத்துடன் திகழ்கிறார். இக்கோயிலில் வழிபட்டால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அடுத்த செய்தி