தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தசரத மன்னர் வழிபட்ட ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள்!

தசரத மன்னர் வழிபட்ட ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள்!

Aug 07, 2022, 07:01 PM IST

google News
தசரத மன்னர் குழந்தை பெற வேண்டி வழிபட்ட திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
தசரத மன்னர் குழந்தை பெற வேண்டி வழிபட்ட திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

தசரத மன்னர் குழந்தை பெற வேண்டி வழிபட்ட திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

ராமநாதபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புல்லாணி. சீதையை இலங்கையிலிருந்து மீட்பதற்காக வந்த ராமபிரான் புட்கள் நிறைந்த இடத்தில் படுத்து உறங்கியதால் திருப்புல்லனை என்றும், அதுவே காலப்போக்கில் மருவி திருப்புல்லாணி எனப் பெயர் வந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

இங்குள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் சமேத பத்மாசனி தாயார் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44ஆவது ஆலயமாக விளங்குகிறது. கோயிலில் ஆதி ஜெகநாதர் பெருமாள், பத்மாசனி தாயார், ஆண்டாள், தர்ப்பண ராமர், பட்டாபிஷேக ராமர், ஆழ்வார்கள் ஆகியோர் தனித்தனி சன்னதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

தசரத மன்னர் குழந்தை பெற வேண்டி இந்த கோயிலில் வழங்கப்பட்ட பாயசத்தைப் பெருகியதால் ராமர் பிறந்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் பாயசத்தைப் பருகினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகற்பத்து ராபத்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சொர்க்க வாசல் திறப்பின் போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.

இங்குள்ள சக்கர தீர்த்த குளத்திலும் பக்தர்கள் புனித நீராடிச் செல்கிறார்கள். அரச மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ள இந்த ஆலயத்தில் நாகதோஷம் நீங்கவும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

அடுத்த செய்தி