Sanjeevi Perumal: தோஷங்கள் போக்கும் பெருமாள்!
Dec 17, 2022, 06:28 PM IST
சுயம்புவாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவி ராய பெருமாள் கோயில் குறித்து இங்கே காண்போம்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏறக்குறைய 6600 ஏக்கர் பரப்பளவில் 2300 அடி உயரத்துடன் அமைந்துள்ளது தலைமலை. மலையின் உச்சியில் சுயம்புவாய் தானே வளர்ந்த தலைமலை பெருமாள் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
சமீபத்திய புகைப்படம்
பிரம்மாஸ்திரத்தின் தாக்குதலால் மயக்கம் அடைந்த ராமன், லட்சுமணர் மற்றும் வானர வீரர்களை மயக்கத்தில் இருந்து மீட்க அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் தலைப்பகுதியே இந்த தலைமலை என தல வரலாறு கூறுகிறது.
மலையின் நான்கு பகுதிகளில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்ல வழிகள் உண்டு. அனைத்து வழிகளும் கன்னிமார் சொன்னை கருப்பண்ணசாமி கோயில் அருகே கூடுகின்றன. அங்கிருந்து செங்குத்தான படிகள் வழியே மலைக் கோயிலை அடையலாம்.
முதலில் வருவது சிறிய திருவடி ஆஞ்சநேயரின் சன்னதி, அடுத்து வருவது ஸ்ரீ கிருஷ்ண பகவான் சன்னதி, சஞ்சீவி மலையின் தலைப்பகுதியில் குடியிருக்கும் சஞ்சீவி ராய பெருமாளுக்கு நல்லேந்திர பெருமாள், அருங்கல் நல்லையன் என திருநாமங்களும் உண்டு. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாசலபதி அருள் புரிகிறார்.
மூலவருக்கு பின்புறம் தானாய் வளர்ந்த சுயம்பு அமைந்துள்ளது. தனி சன்னதியில் தாயார் அலர்மேலு மங்கை. காணாமல் போன காராம் பசுவை தேடி பல இடங்களிலும் அலைந்த ஒரு மாடு ஓட்டி இந்த மலையின் உச்சிக்கு வருகிறார்.
அங்கே காணாமல் போன காணாம் பசுவின் மடியில் ஒரு சிறுவன் முட்டி முட்டி பால் குடிப்பதை கண்டு அதை தன்னுடைய பண்ணையாரிடம் பொய் சொல்கிறார். பண்ணையாரின் கனவில் சங்கு சக்கரதாரியாக வந்த வைகுண்ட பெருமாள் பசு சிறுவனுக்கு பாலூட்டிக் கொண்டு இருந்த மலையின் உச்சியில் கோயில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படியே கோயில் கட்டி வழிபடப்பட்டு வருகிறார் தலைமலை சஞ்சீவிராயப் பெருமாள். வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் பெருமாளுக்கு கன்று குட்டிகளை காணிக்கையாக வழங்குகின்றனர். சித்ரா பௌர்ணமி, தை திருவோணம், ஆடி 18 அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத நவராத்திரி விழா, விஜயதசமி அன்று அம்பு சேர்வை, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.