Sri Srinivasa Perumal: தென்திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்!
Nov 07, 2022, 07:39 PM IST
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடக்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலை உள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 210 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் பக்தர்களால் தென்திருப்பதி அழைக்கப்படுகிறது.
சமீபத்திய புகைப்படம்
எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் ஒன்பதடி உயரம் மூலவராக ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்று நின்ற நிலையில் பெருமாள் அருள் பாலிப்பதால் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேண்டி வந்த காரியங்கள் சில மாதங்களில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தென் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு குலதெய்வ கோயிலாகவும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் விளக்குகிறது. சீனிவாச பெருமாள் கோயிலின் கீழ் அடிவாரத்தில் உள்ள கோனேரி குலமும் ஒரே கல்லினால் ஆன 11 அடி ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையும் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள குளத்தில் எப்போதும் வறட்சி காலத்தில் நீர் நிரம்பிக் காணப்படுவது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. மாலைமீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கிறது.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம் என்றும் திருப்பதி சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வந்தாலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.