தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காஞ்சிபுரம் சோளீஸ்வரர் கோயில் வழிபாடு!

காஞ்சிபுரம் சோளீஸ்வரர் கோயில் வழிபாடு!

Jul 30, 2022, 09:56 PM IST

google News
காஞ்சிபுரம் சோளீஸ்வரர் கோயிலின் வழிபாடுகள் குறித்து இங்கே காண்போம்.
காஞ்சிபுரம் சோளீஸ்வரர் கோயிலின் வழிபாடுகள் குறித்து இங்கே காண்போம்.

காஞ்சிபுரம் சோளீஸ்வரர் கோயிலின் வழிபாடுகள் குறித்து இங்கே காண்போம்.

எட்டுத் திசைகளிலும் எட்டு பைரவர் சிவலிங்கங்களைக் கொண்ட சோளீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இறைவனின் அம்சமாகவும் அவதாரமாகவும் இருக்கும் பைரவருக்குத் தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிகச் சிறப்பானதாகும்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவ.17 யாருக்கு அதிர்ஷ்டம்.. யாருக்கு சிக்கல் பாருங்க!

Nov 16, 2024 06:41 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.17 யாருக்கு அதிர்ஷ்டம்.. யாருக்கு சிக்கல் பாருங்க!

Nov 16, 2024 06:26 PM

விசாக நட்சத்திரம்.. சுக்கிரனின் அதிர்ஷ்டத்தில் குதிக்கும் 3 ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்

Nov 16, 2024 03:10 PM

சனி 3 ராசிகள் உள்ளே கால் வைத்தார்.. சங்கடங்கள் தீரும்.. இனி இந்த ராசிகள்.. தொட முடியாது ராஜா!

Nov 16, 2024 03:00 PM

செவ்வாய் பட்டாபிஷேகம் தொடக்கம்.. தலைகளாக பிடித்து வாழும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் ஓடி வருகிறது..!

Nov 16, 2024 02:27 PM

கடகம், சிம்மம், மீனம் ராசியினரே.. சனி பகவானின் கோபம் சுட்டெரிக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

Nov 16, 2024 01:19 PM

பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவதலங்களிலும் வடகிழக்கு பகுதியில் காலபைரவருக்கு என தனிச்சன்னதி அமைந்திருக்கும். காலையில் சிவ பூஜை சூரியனிடம் இருந்து தொடங்கி அடுத்த ஜாமத்தில் பைரவருடன் முடிகின்றது.

முதல் வழிபாடு விநாகயருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவரும் சிவனுடைய அம்சமாகக் கருதப்படுகின்றார். 

இந்த கோயில் அஷ்ட பைரவர்களும் பூஜை செய்த இடமாக இந்த சோளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அஷ்ட பைரவர்களும் பூஜை செய்யும் காட்சி மூலவரின் பின்னால் புடைப்பு சிற்பமாகக் காணப்படுகின்றது.

மூலவரான சோளீஸ்வரர் பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். சம்ஹார பைரவர் என்றும் இவருக்கு மற்றொரு பெயர் உண்டு. மேலும் துர்க்கை, நவகிரகம், சனீஸ்வரன், சூரியன் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் இங்கு உண்டு. திசைக்கு ஒன்றாகக் கெட்ட திசைகளிலும் எட்டு பைரவரைத் தரிசிக்கலாம்.

பிரம்மாவின் அகந்தையை முடித்தவர் சிவனின் அம்சமாகப் பைரவரையே சாரும். அகந்தையோடு வருபவர்களை அவற்றை நீக்கி நல்வழி காட்டுபவராக இக்கோயிலில் வைரவர் திகழ்ந்து வருகின்றார். 

இத்திருக்கோயிலில் சம்ஹார பைரவர் அசித்தாங்கு பைரவர், சனீஸ்வரர், குரு பைரவர், குரோதன் பைரவர், கபால பைரவர் என்று எட்டுத் திக்கிலும் தனித்தனி சன்னதிகளை எட்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை