தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காசிபாளையம் 36 அடி உயர பாலமுருகன்

காசிபாளையம் 36 அடி உயர பாலமுருகன்

Aug 07, 2022, 06:34 PM IST

google News
காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

காசிபாளையம் பாலமுருகன் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு அருகே காசிபாளையம் பகுதியில் உள்ள மலைத் தோட்டத்தின் குன்றின் மேல் பாலமுருகன் திருக்கோயில் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை பரம்பரை அறங்காவலர் குழுவினரின் வம்சாவழியினரே இக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.

சமீபத்திய புகைப்படம்

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோயிலின் மலை அடிவாரத்தில் நிலை கோபுரம் அருகே செல்வ விநாயகர் கோயில் அமையப் பெற்றுள்ளது. மலைக் கோயிலின் முதல் 35 படிக்கட்டுகளை ஏறிச் சென்றால் இடப்புறம் இடும்பன் காட்சி தருகிறார். இடும்பனின் ஆலயத்திலிருந்து 30 படிக்கட்டுகளைக் கடந்து சென்றால் முருகன் ஆலய நிலை காணப்படுகின்றது.

கோயிலில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமையப்பெற்றுள்ளது. மகா மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் பொங்கல் மணமும், தென்மேற்கு கிழக்கு நோக்கி விநாயகர் ஆலயமும் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றன. விநாயகர் சன்னதியின் முதல் பகுதியில் மூஷிக வாகனமும், பலிபீடமும் அமைந்துள்ளது.

முருகன் ஆலய கருவறை வெளிப்புறத்திற்கு சுவற்றில் தாமரை பீடத்தின் மேல் தட்சிணாமூர்த்தியின் சிலை தெற்கு முகம் பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு சுவற்றில் தாமரை பீடத்தின் மேல் அன்னை விஷ்ணு துர்கா தேவியின் சிலை வடக்கு முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மேல் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஐந்து தலை நாக வடிவத்தில் குடை பிடிப்பது போன்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படுகின்றது. இம்மலைக் கோயிலில் 36 அடி உயர முருகனின் சிலை நிறுவப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.

அடுத்த செய்தி