தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gowmaariyamman Temple: செவ்வாய் தோஷம் போக்கும் கௌமாரியம்மன்!

Gowmaariyamman Temple: செவ்வாய் தோஷம் போக்கும் கௌமாரியம்மன்!

Nov 23, 2022, 06:23 PM IST

google News
வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

தேனியில் இருந்து கம்பம் செல்லும் பாதையில் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் கோயில். வீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்தபோது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டதாகவும் பின்னர் சிவனை நோக்கி தவம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

பின்னர் சிவனின் ஆணைப்படி கௌமாரியம்மன் வழிபட்டு அதற்குப் பிரதிபலனாக இந்த கோயிலை கட்டியதாகவும் கூறுகிறது தல வரலாறு. இந்த கோயிலில் அம்மன் கன்னி தெய்வமாக காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்கள் ஒன்றாக கருதப்படுகிறது.

கண் நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனை தூய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்று சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலின் முன்பு கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்புத்தடி மண்டபம் அமைந்துள்ளது.

இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடப்படுகிறது. அதை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தில் கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கெளமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார். பிரகாரத்தை சுற்றி வரும்போது தெற்கே விநாயகர், வடக்கே நவகிரக மண்டபமும் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22 ஆவது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது.

இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21 நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டுமே படைக்கப்படும். நோய்களுக்கு நிவாரணம், வேலை வாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் பரவசம் அடைகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால் அக்னி சட்சி சுமந்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோய் உள்ளவர்கள் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

அடுத்த செய்தி