தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பிரம்மாண்ட விநாயகர்.. செல்லும் வழியிலேயே அமர்ந்தார்.. நகர மறுத்த ஈச்சனாரி விநாயகர்

HT Yatra: பிரம்மாண்ட விநாயகர்.. செல்லும் வழியிலேயே அமர்ந்தார்.. நகர மறுத்த ஈச்சனாரி விநாயகர்

Mar 15, 2024, 06:00 AM IST

google News
Eachanari Vinayagar: இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு 27 நட்சத்திரங்களான அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களுக்குமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுவது மிகப்பெரிய விசேஷமாக பார்க்கப்படுகிறது.
Eachanari Vinayagar: இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு 27 நட்சத்திரங்களான அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களுக்குமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுவது மிகப்பெரிய விசேஷமாக பார்க்கப்படுகிறது.

Eachanari Vinayagar: இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு 27 நட்சத்திரங்களான அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களுக்குமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுவது மிகப்பெரிய விசேஷமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து கடவுள்களுடன் ஒப்பிடுகையில் முழு முதற் கடவுளாக விளங்க கூடியவர் விநாயகர் பெருமான். எந்த கோயில்களுக்குச் சென்றாலும் முதலில் வழங்க வேண்டிய தெய்வமாக விநாயகப் பெருமான் இருப்பார். இந்த காரியத்தை தொடங்கினாலும் விநாயகர் பெருமானை வேண்டிக் கொண்டு தொடங்கினால் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகமாகும்.

சமீபத்திய புகைப்படம்

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

பார்த்தால் யோகம் வரும்.. சுக்கிரன் நவம்பர் மாதம் தனுசு ராசி நுழைவு.. வெறித்தனமான பணமழை உங்களுக்கு தான்!

Nov 27, 2024 12:28 PM

சனி வெறி பிடித்துவிட்டார்.. விரட்டி விரட்டி கொட்டுவார்.. இந்த ராசிகள் மீது இனி டச் பண்ண முடியாது!

Nov 27, 2024 10:59 AM

கயிறு கட்டி இழுக்கும் செவ்வாய்.. ரெடியா இருங்க.. இந்த ராசிகள் உச்சம் செல்வது உறுதி.. பணம் செய்யும் வேலை!

Nov 27, 2024 09:57 AM

சனி மோசமான ஆளுப்பா.. இனி பணத்தில் பறக்கும் ராசிகள் நீங்கதான்.. உச்சத்தில் கொடி பறக்கும்!

Nov 27, 2024 09:54 AM

கேது பகவானால் கடக ராசிக்கு அதிஷ்டம்.. நல்ல முன்னேற்றம் இருக்கும்.. ஆனால் இதில் கவனம் தேவை!

Nov 27, 2024 09:41 AM

உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர் பெருமான். அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இவர்.

விநாயகர் சதுர்த்தி திருநாளன்று இவருக்கென ஊர்வலம் நடத்தி இந்தியா முழுவதும் மிகப்பெரிய விசேஷம் நடத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல கோயில்களில் வீட்டிலிருந்து விநாயகர் பெருமான் அருள் பாலித்து வருகிறார் அந்த வகையில் சிறப்பு மிக்க கோயிலாக திகழ்ந்து வரக்கூடியது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்.

தலத்தின் பெருமை

 

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு 27 நட்சத்திரங்களான அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களுக்குமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுவது மிகப்பெரிய விசேஷமாக பார்க்கப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விநாயகர் பெருமான் 5 அடி உயரமும் மூன்றடி எடையும் கொண்டவர் என்று சிறப்போடு பிரம்மாண்ட விநாயகர் ஆக அருள்பாளித்து வருகிறார்.

தல வரலாறு

 

பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 அடி உயரத்திலும், மூன்றடி அகலமும் கொண்டு செய்யப்பட்டது இந்த விநாயகர் விக்ரகம்.

மதுரையில் இருந்து இந்த புத்தகத்தை வண்டியில் எடுத்து வரும் பொழுது திடீரென அந்த வண்டியின் அச்சு முறிந்து கீழே விழுந்துள்ளது. தற்போது விநாயகர் பெருமான் வீச்சி இருக்கக்கூடிய இடத்தில் அப்படியே அந்த விக்கிரகம் அமர்ந்து விட்டது.

அதற்குப் பிறகு பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தபோது அந்த இடத்தை விட்டு விநாயகப் பெருமானின் விக்ரகம் நகரவில்லை. அதன் பின்னர் அந்த விக்ரகம் அங்கேயே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அதை அப்படியே வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார். அந்த இடம்தான் தற்போது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக விளங்கி வருகிறது.

வேண்டுதல்கள்

 

மனம் உருகி இங்கு இருக்கக்கூடிய விநாயக பெருமானை வழிபட்டால் எடுத்த காரியம் அனைத்தும் தடைகள் இல்லாமல் நடக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக கல்வி மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்புகின்றனர். அதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

வேண்டுதல்கள் நிறைவேறிய பொழுது தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை மற்றும் அருகம்புல் படைத்தல், விநாயக பெருமானுக்கு மாலை சாற்றுதல், பாலாபிஷேகம், அன்னதானம் என தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்ப பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் திருப்பணிக்கு பொருள் உதவி செய்து பக்தர்கள் தங்களது முயற்சி கடனை தீர்த்துக் கொள்கின்றனர்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. கோயம்புத்தூரில் இருந்து அரை மணி நேரம் தூரத்தில் ஈச்சனாரி முருக பெருமான் கோயில் அமைந்திருக்கின்றது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

அடுத்த செய்தி