தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குடும்பத்தில் விளையாடப்போகும் குரு.. தலையில் அமர்ந்து அடிக்கப் போகிறார்.. இந்த ராசிக்கு கவனமா இருந்துக்கோங்க..!

குடும்பத்தில் விளையாடப்போகும் குரு.. தலையில் அமர்ந்து அடிக்கப் போகிறார்.. இந்த ராசிக்கு கவனமா இருந்துக்கோங்க..!

Apr 26, 2024, 05:18 PM IST

Guru Bhagavan: குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagavan: குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு அசுப மற்றும் சுப பலன்களை கொடுக்கப் போகின்றது.

குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையாமல் தொடர்ந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

மதப் பெற்றால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வீட்டில் சாதகமற்ற சூழ்நிலை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 உயர் அலுவலர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மன உளைச்சலால் நீங்கள் அவதிப்பட அதிக வாய்ப்பு உள்ளது வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு கடன் கொடுக்காமல் தப்பித்தால் உங்களுக்கு பணம் சேரும். இல்லை என்றால் சிக்கி கொள்வீர்கள். குரு பகவானால் பலவீனமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

தனுசு ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் செலவுகள் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொடர்ந்து வந்த வழக்குகள் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கக்கூடும். அதிக கவனத்தோடு எடுத்த செயல்களை செய்வது நல்லது. 

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி காப்பாற்றிக் கொள்வது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி