Pooram Nakshatra: நீங்கள் பூரம் நட்சத்திரமா? - அது அம்மனின் நட்சத்திரம்!
Jul 08, 2023, 10:18 AM IST
ஆடிப்பூரம் திருநாளில் துர்கா தேவி வழிபட்டால் கிடைக்கும் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
சக்தியாக விளங்கக்கூடிய அம்மன் அவதாரம் எடுத்த நட்சத்திரம் தான் பூரம். இந்த விசேஷ நாளில் அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகும் என நம்பப்படுகிறது.
சமீபத்திய புகைப்படம்
திருவாதிரை நட்சத்திரத்திற்குப் பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி அம்மனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று கோயிலில் வழிபாடு செய்தால் நோய் மற்றும் கடன் உள்ளிட்ட சிக்கல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நோய்கள் விலக நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மேலும் சிறப்பாகும்.
அம்மனின் அவதாரமாக விளங்கும் துர்கா தேவியை வழிபட்டால் குடும்ப சிக்கல்கள் நீங்கும் நல்ல வாழ்க்கை அமையும் எனக் கூறப்படுகிறது. வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்குத் திருவனந்தபுரம் ஆண்டவரை வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
காலத்திற்கு ஏற்ப கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும் என்பது ஐதீகமாகும். பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் விசேஷமாகும். அவிட்ட நட்சத்திரம் உங்களுக்கு யோகத்தை அள்ளித் தரும். பூரட்டாதி, விசாகம் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உங்களுக்கு அதீத நன்மைகளைத் தரும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதி பெயர்கள் ஆகாது. எதையும் ஒழுக்கத்தோடு தைரியமாக அணுகக்கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். தான தர்ம காரியங்களில் முழுமையான ஈடுபாடு இருக்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்புத்தாலமாக ஸ்ரீ ஹரிதீதேஸ்வரர் கோயில் விளங்குகிறது. ஏனென்றால் இந்த தளத்தில் நாக தீர்த்தம், சிவ தீர்த்தம், இந்தி தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உள்ளன.
இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த தளத்தில் பூர நட்சத்திர நாளன்று அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். இவ்வாறு வழிபாடு செய்வதற்கு ஆடிப்பூரம் மிகச்சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்