Ketu Rasipalan: அந்தர் பல்ட்டி அடித்த கேது.. பாய்ந்த சுக்கிரன்.. கதவைத் திறந்தால் கொட்டும் ராசிகள்.. நீங்க என்ன ராசி!
Aug 22, 2024, 03:29 PM IST
Ketu Rasipalan: கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Ketu Rasipalan: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் கிரகமாக விளங்கி வருகின்றார். கேது பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
சமீபத்திய புகைப்படம்
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசிகள் நுழைகின்றார்.
இதன் காரணமாக கன்னி ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வரும் கேது பகவானோடு சுக்கிர பகவான் இணைகின்றார். கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
சுக்கிரன் கேது சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உங்களுடைய சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடைபெறும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் சுக்கிரனுக்கு கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளை பெற்று தரும்.
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் உங்களுக்கு கணிசமாக நல்ல லாபத்தை பெற்று தரும்.
கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கையில் உங்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9