தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இதைத்தான் செய்ய வேண்டுமா? - சித்திரை திருநாள் தரும் பலன்கள்..!

இதைத்தான் செய்ய வேண்டுமா? - சித்திரை திருநாள் தரும் பலன்கள்..!

Apr 14, 2023, 05:00 AM IST

google News
Chithirai Thirunal: பலன்களைத் தரும் வழிபாடு முறைகளை உணர்த்தும் சித்திரை திருநாளான தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
Chithirai Thirunal: பலன்களைத் தரும் வழிபாடு முறைகளை உணர்த்தும் சித்திரை திருநாளான தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

Chithirai Thirunal: பலன்களைத் தரும் வழிபாடு முறைகளை உணர்த்தும் சித்திரை திருநாளான தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

சித்திரை திருநாள் தமிழ் மாதங்களில் முதல் நாள் அதாவது தமிழ்ப் புத்தாண்டு திருநாளாகும். ஆன்மீகத்தைப் பொருத்தவரை பல வழிகளில் இந்த நாள் மிகப்பெரிய விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. இது சித்திரை மாதமே மிகச் சிறப்பு வாய்ந்த மாதமாகும். அதாவது இது இறைவனின் மாதங்களில் ஒன்றாகும்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம், மிதுனம், மீன ராசியினரே அள்ளிக் கொடுக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. ஜாக்பாட் உங்களுக்குதான்!

Nov 27, 2024 01:21 PM

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

பார்த்தால் யோகம் வரும்.. சுக்கிரன் நவம்பர் மாதம் தனுசு ராசி நுழைவு.. வெறித்தனமான பணமழை உங்களுக்கு தான்!

Nov 27, 2024 12:28 PM

சனி வெறி பிடித்துவிட்டார்.. விரட்டி விரட்டி கொட்டுவார்.. இந்த ராசிகள் மீது இனி டச் பண்ண முடியாது!

Nov 27, 2024 10:59 AM

கயிறு கட்டி இழுக்கும் செவ்வாய்.. ரெடியா இருங்க.. இந்த ராசிகள் உச்சம் செல்வது உறுதி.. பணம் செய்யும் வேலை!

Nov 27, 2024 09:57 AM

சனி மோசமான ஆளுப்பா.. இனி பணத்தில் பறக்கும் ராசிகள் நீங்கதான்.. உச்சத்தில் கொடி பறக்கும்!

Nov 27, 2024 09:54 AM

இந்த மாதத்தில் முக்கிய நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதத்தை பொறுத்தளவு முதல் நாளிலேயே இறை வழிபாடானது தொடங்கி விடுகிறது.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசம் செய்யும் திருநாளில் சித்திரை முதல் நாளாகும். உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளைப் படைத்த பிரம்மா, இந்த சித்திரை முதல் நாளில் தான் பூமியைப் படைத்தார் எனும் புராணம் கூறுகிறது.

சித்திரை முதல் நாளில் மேஷ ராசியில் தொடங்கி ஒவ்வொரு ராசியாகச் சஞ்சாரம் செய்து 12-வது ராசியான மீன ராசியில் சஞ்சரிப்பார் சூரிய பகவான். ஒவ்வொரு ஆண்டும் இது சுழற்சி முறையில் நடைபெறும்.

சூரிய பகவானின் பயணம் தொடங்கும் முதல் நாளே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. அதுவே சித்திரை மாதத்தின் முதல் நாளாகும்.

வழிபாடு

சித்திரை திருநாளான இன்று காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்துவிட்டு சூரிய உதயத்தைத் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்குச் செல்வது சாலச் சிறந்தது.

அப்படி இல்லை என்றால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்யலாம். பாசிப்பருப்பு, பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, நீர்மோர், பானகம், சுண்டல் ஆகியவற்றைச் சமைத்து இறைவனுக்குப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதேசமயம் வழிபாடு செய்த உணவுகளை மற்றவருக்கு தானம் செய்ய வேண்டும். மனிதனின் வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் அனைத்தும் கலந்து வரும் என்பதை உணர்த்தவே இது போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

மேலும் சமையலில் உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு, கசப்பு துவர்ப்பு என அறுசுவை உணவுகளைச் செய்து படைக்க வேண்டும். சூரியனை வைத்துக் கணக்கிடப்படும் சூரிய மானம் என்பதைத் தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் பின்பற்றுகின்றனர்.

இன்றைய தினத்தில் தான் பெரியோர்கள் பஞ்சாங்கம் வாசித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார். இந்நாளில் வழிபாடுகளுடன் சேர்த்து வீட்டில் உள்ள பெரியோர்களையும் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் விரதம் முழுமையாகி வேண்டிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி