தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Remedy To Be Done By Guru Bhagavan Dosha

Guru Bhagavan: குருபகவான் தோஷம் நீங்க வேண்டுமா? - அப்போ இதுதான் வழி!

May 21, 2023, 01:51 PM IST

குரு பகவானின் தோஷம் நீங்கச் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவானின் தோஷம் நீங்கச் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவானின் தோஷம் நீங்கச் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை வைத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஆன்மீகம் கூறுகிறது. நவகிரகங்களும் தெய்வீக பலன்களைக் கொண்டிருந்தாலும் ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து ஒருவருக்கு நன்மையும், தீமையும் அமையும்.

சமீபத்திய புகைப்படம்

Jackpot: ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பண மழையில் சிக்கிக் கொண்டது யார்..!

Apr 28, 2024 01:42 PM

மீனத்தில் நேராக பாய்கிறார் புதன்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. அது எந்தெந்த ராசிகள்.. பார்க்கலாம் வாங்க

Apr 28, 2024 01:31 PM

Palli Vilum Palankal: நம் உடலின் பாகங்களில் எங்கெங்கு பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

Apr 28, 2024 12:58 PM

மேஷத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. பெட்டி பெட்டியாக வரப்போகிறது.. ராஜாவாகப் போவது யார்?

Apr 28, 2024 12:00 PM

குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?

Apr 28, 2024 10:32 AM

2025 வரை பண மழை.. சனிப்பெயர்ச்சியில் உண்டான யோகம்.. யோகக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்.. உங்க ராசி என்ன?

Apr 28, 2024 10:19 AM

அவ்வாறு யோக பலன்களில் அமர்ந்தால் குரு பகவானைப் போல் அள்ளிக் கொடுப்பவர் நவகிரகங்களில் எவரும் இல்லை என ஜோதிடம் கூறுகிறது. நவகிரகங்களில் முக்கிய இடம் பெற்றவர் குருபகவான்.

ஒருவரின் ஜாதகப்படி குரு பகவானின் பார்வை பட்டால் தான் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், பதவி உள்ளிட்டவை ஏற்படும். ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தால் அல்லது கொடூரமானவராக இருந்தால் கோச்சார ரீதியாக குரு தோஷம் நீங்கப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அதாவது குரு பகவானின் அசுப பலன்களை போக்குவதற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாகத் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. தட்சணாமூர்த்தியை வேண்டி விரதம் இருந்து பூஜித்தால் குரு தோஷம் விளக்கும் என்று சூரியனார் கோயில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவகிரக ஸ்தலங்களில் குரு பகவான் ஆலங்குடியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். குரு பகவானின் தோஷம் நீங்குவதற்கு மிகச் சிறப்பான இடம் இதுதான். வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், வெண் முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குருபகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

பொட்டுக்கடலையில் அவருக்கு மாலை அணிவித்து குரு கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து வந்தால் குரு தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே குரு பகவான் ஒருவருக்கு அள்ளிக் கொடுக்கக் கூடியவர். அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்றவாறு இது போன்ற தோஷங்கள் ஏற்படுகின்றன. எனவே கூடுமானவரைச் செய்யும் செயலை நன்மையாக அமைத்துக் கொண்டால் வரும் காலங்களிலும் தோஷம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என ஜோதிடம் கூறுகிறது.

பொதுவாக குரு பகவானைப் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்யலாம். ஆனால் தோஷ நிவர்த்திக்காகக் குருபகவானே வழிபாடு செய்ய வேண்டும் என்றால் சரியான ஜோதிடரை அனுப்பித் தெளிவாக அறிந்து அதற்கான பரிகாரத்தைச் செய்து தோஷத்திலிருந்து விடுபடலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்