Kan Thirusti: குடும்பத்தில் தொடர்ந்து சிக்கலா? - கெட்ட சக்திகளைத் தடுக்கும் சில பரிகாரங்கள்
Jun 10, 2023, 02:30 PM IST
வீட்டிற்குள் கெட்ட சக்திகள் நுழையாமல் தடுக்க சில பரிகாரங்களை இங்கே காண்போம்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரைத் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் எப்போதும் சிக்கல்களும், தொடர்ந்து சண்டைகளும், பொருளாதார இழப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற சிக்கல்களுக்கு சில பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சமீபத்திய புகைப்படம்
பரிகாரங்கள்
வாரம் ஒரு முறை கல் உப்பை நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் கண் திருஷ்டியால் ஏற்பட்ட உடல் அசதி சோம்பல் ஆகியவை நீங்கும். அதேபோல் அவரவர் பிறந்த கிழமைகளில் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இதுபோன்ற செய்முறைகளைச் செய்து குளிக்கலாம்.
கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு வேஷ்டியில் ஒரு சிறிய துணியைக் கிழித்துத் திரி செய்து அந்த திரியைத் தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடது புறமாகத் தடவி அதனைச் சுவர் ஓரமாக வைத்து எரித்து விட வேண்டும்.
இப்படிச் செய்தால் குழந்தைகள் அழாமல் தூங்கிவிடும். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷமும் நீங்குவதற்குத் தெருவில் இருந்து மண் கொஞ்சம் எடுத்து வந்து, கடுகு உப்பு 3 காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்த அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இது கண் திருஷ்டியைப் போக்கும் என நம்பப்படுகிறது. இந்த திருஷ்டி பரிகாரத்தைச் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
நமது வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்க, கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களின் திருஷ்டி தாக்காமல் இருக்க வீட்டு வாசலில் பௌர்ணமி நாளில் நீர் பூசணி கட்டி தொங்க விட்டால் கண் திருஷ்டி விளக்கும் எனக் கூறப்படுகிறது.
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்குக் கற்றாழை கட்டி தொங்க விடலாம். வாசலுக்கு மேல்பகுதியில் ஒரு எலுமிச்சை ஒரு பச்சை மிளகாய் என மூன்று எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கயிற்றில் கோர்த்துத் தூங்க விடலாம். இந்த பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும். இதோடு வெள்ளை எருக்கு வேர், படிகார கல், மருதாணி கட்டை உள்ளிட்டவற்றைச் சேர்த்துத் தொங்க விடலாம்.
இவ்வாறு இது போன்ற பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டியில் இருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்