தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: மேஷம் முதல் மீனம் வரை! பணம் சம்பாதிக்க ஆசையே வராத நிலை யாருக்கு உண்டாகும்? ஜோதிட ரகசியம் இதோ!

Money Luck: மேஷம் முதல் மீனம் வரை! பணம் சம்பாதிக்க ஆசையே வராத நிலை யாருக்கு உண்டாகும்? ஜோதிட ரகசியம் இதோ!

Kathiravan V HT Tamil

Jul 22, 2024, 06:00 AM IST

google News
உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.
உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.

உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.

உத்யோகம் புருஷ லட்சணம் என்ற காலம் மாறி, உத்யோகம் மனுஷ லட்சணம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஏதாவது ஒன்றை செய்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் ‘உப்பு விற்க சென்றால் மழை! மாவு விற்க சென்றால் காற்று’ என்ற நிலையில் பலர் உள்ளனர். இந்த நிலையில் சம்பாதிக்க இயலாத ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். 

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

லக்னாதிபதி வலுப்பெறுவது மிக அவசியம் 

எதை ஒன்றை செய்வதாக இருந்தாலும், லக்னாதிபதியின் வலு என்பது மிக அவசியம், லக்னாதிபதி சமம் என்ற நிலைக்கு கீழே செல்லவே கூடாது. அப்படி அவர் சென்றுவிட்டாலே ஜாதகர் பெரிய முயற்சிகளை செய்ய முடியாது. 

ராசி அதிபதி துணையாவது இருக்க வேண்டும்

லக்னாதிபதி கெட்டுவிட்ட நிலையில், ராசி அதிபதி துணை இருப்பது அவசியம். உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் பலர் 40 வயதிற்கு மேல்தான் பணம் சேர்த்து உள்ளனர். பணம் சம்பாதிக்க வயது தடையில்லை, ஆனாலும் லக்னாதிபதி பலகீனமாக இருப்பது, லக்னத்தில் பகை கிரகங்கள் இருப்பதும் சம்பாதிக்கும் எண்ணத்தை குறைத்துவிடும். 

முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடம் 

செயல்படும் ஸ்தானமான மூன்றாம் இடம் பலவீனமாக இருந்தால் சோம்பேறிதனம் இயற்கையில் வந்துவிடும். ஒன்று, இரண்டு, மூன்று வீடுகளும் கெட்டுவிட்ட ஒரு ஜாதகத்திற்கு சம்பாதிக்கும் ஆசையே வராது. 

உதாரணம்

உதாரணமாக கடக லக்னத்தை எடுத்து கொள்வோம். இதன் லக்னாதிபதி சந்திரன் விருச்சிகம் ராசியில் நீசம் அடைந்துவிட்டார். கடக லக்னத்தில் சனியும், இரண்டாம் இடத்தில் ராகு, செவ்வாய், மூன்றாம் இடத்திற்கு உரிய புதன் மீனத்தில் நீசம், கும்பத்தில் சூரியன், சுக்கிரன் ஆகிய நிலையில் இருந்தால், சம்பாதிக்கும் தன்மை இருக்காது.

முக்கியமான மூன்று இடங்கள் 

உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது. 

லக்னாதிபதி சமம் என்ற நிலைக்கு கீழே செல்லும் போது, தன ஸ்தானம் அல்லது தனாதிபதி பலவீனம் பெறுதல், முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும் போதும் சம்பாதிக்கும் எண்ணம் வராது. 

பூர்வபுண்ணியமும், பாக்கியமும் தரும் நன்மைகள்

ஆனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்து, பாக்கிய ஸ்தானம் நன்றாக இருந்தால், வேறு ஏதேனும் வழிகளில் ஜாதகரால் வருவாய் ஈட்ட முடியும். 

கும்ப லக்னத்தை எடுத்து கொண்டால், சனி பகவான் 3ஆம் இடத்தில் நீசம், 2க்கு உடைய குரு 12இல் நீசம், 7ஆம் அதிபதி சூரியன் திக்பலம் பெற்று இருந்தால், சம்பாதிக்கும் தன்மை இல்லாமல் போகும்.  

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி