தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கான செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கான செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 13, 2024, 05:20 PM IST

google News
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார்.
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார்.

மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார்.

நவக்கிரகங்களின் தளபதி என்று செவ்வாய் பகவான் அழைக்கப்படுகிறார். ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரியம், வீரம் ஆகிய பண்புகளுக்கு காரகத்துவம் பெற கிரகம் செவ்வாய் ஆவார். 

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார். 

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி கடக ராசியில்  வக்ர நிலை அடையும் செவ்வாய் பகவான் பின்னோக்கி நகர்வார். கடகத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், 12 ராசிகளுக்கும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பலன்கள் உண்டாகும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். 

மேஷம் முதல் கன்னி வரை செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்:-

மேஷம்
மேஷம் ராசியினருக்கு மனதில் குழப்பம் உண்டாகும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பேச்சில் இனிமை உண்டாகும். ஆனால் சில செயல்பாடுகளால் உங்கள் மனம் கலங்கலாம். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். பணியிடங்களில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். 

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்பட வேண்டிய காலம். மனதில் ஏற்ற தாழ்வுகள் வந்து போகும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். பணியிடங்களில் பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானமும், லாபமும் பெருகும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் முக்கியம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்கார்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் ஏற்றத் தாழ்வுகள் வந்து போகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அறிவுசார் வேலை மூலம் வருமானம் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். லாப வாய்ப்புகளும் அமையும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி