’தன்மானம்! வேகம்! உழைப்பு! அதிகாரம்!’ அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்!
Nov 08, 2024, 05:24 PM IST
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியான செவ்வாய் பகவான் வைராக்கியம், கோபம், தன்மானம், வீரம், வேகம், பிடிவாதம், தான் என்கிற எண்ணம், அதீத நம்பிக்கை ஆகிய எண்ணங்களை கொடுப்பவராக உள்ளார். செவ்வாய் பகவான் ஆனவர் மகரம் ராசியில் உச்சம் பெறும் கிரகம் ஆகும்.
மகரம் ராசியில் 2 பாதங்களும், கும்பம் ராசியில் 2 பாதங்களும் கொண்ட நட்சத்திரமாக அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. ’அவிட்டம் தவிடு பானையும் தங்கம்’ என்ற சொலவடை உண்டு. அதாவது தவிடு விற்று கூட செல்வத்தை உழைப்பு மூலம் பெருக்கிக் கொள்வார்கள் என்பதுதான் இதன் பொருள்.
சமீபத்திய புகைப்படம்
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியான செவ்வாய் பகவான் வைராக்கியம், கோபம், தன்மானம், வீரம், வேகம், பிடிவாதம், தான் என்கிற எண்ணம், அதீத நம்பிக்கை ஆகிய எண்ணங்களை கொடுப்பவராக உள்ளார். செவ்வாய் பகவான் ஆனவர் மகரம் ராசியில் உச்சம் பெறும் கிரகம் ஆகும்.
இவர்களுக்கு தன்மான உணர்வு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். உழைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள். தன்னுடைய உழைப்பை பெரிதாக நம்பும் இவர்களுக்கு அடுத்தவர்களை அலட்சியாமாக கருதும் எண்ணம் அதிகம் இருக்கும். விபத்து உள்ளிட்ட தொந்தரவுகள் வராமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
அவிட்டம் நட்சத்திரத்தின் சின்னம் முரசு சின்னம் ஆகும். இதற்கு உரிய விலங்கு பெண் சிங்கம் ஆகும். இதனால் இவர்களுக்கு கர்ஜணை இயல்பாக இருக்கும். இவர்களுக்கு கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கும். கண் பிரச்னை மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இவர்கள் உதவும் போது நன்மைகள் உண்டாகும். இயன்றதை இல்லாதவர்களுக்கு செய்யும் போது அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.
பத்திரிக்கை, ஊடகத் துறை சார்ந்த ஆர்வம் அவிட்டம் நட்சத்திரக்கார்களுக்கு இயல்பாக இருக்கும். நல்ல விஷயங்களை பலருக்கு சொல்ல வேண்டும் என்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முன்கோபம் கொண்டவர்கள் என்பதால் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாது. எதையும் வெளிப்படையாக பேசிவிடும் இயல்பு இவர்கள் உடையது.
அவிட்ட நட்சத்திரத்திற்கு உரிய பறவையாக பொன்வண்டு உள்ளது. இவர்களுக்கு உரிய மரமாக வன்னி மரம். இவர்கள் வன்னி மரத்தை சுற்றி வர சனி தோஷம் நீங்கும். வன்னி இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் தரும் சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
கலை ஆர்வம் கொண்ட இவர்களுக்கு இசை மீது நாட்டம் இருக்கும். எந்த பிரச்னையும் சந்திக்க தயாராக உள்ள இவர்களுக்கு அச்சம் இருக்காது. சுய உழைப்பினால் முன்னேறி சுயமரியாதை உடன் வாழ ஆசை படுவார்கள். தெய்வ பக்தி மீது நாட்டம் கொண்ட இவர்களுக்கு குல தெய்வ ஈடுபாடு அதிகம் உண்டு. பிறர் சாந்து இயங்குவதை தவிர்க்க முயற்சி செய்யும் இவர்கள் சொந்த காலில் நிற்பதை லட்சியமாக கொண்டு இருப்பார்கள். அதே வேளையில் உழைப்புக்கு ஏற்ற பலனுக்காக ஏங்கி தவிப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.