Karpuravalli Benefits: கடன் பிரச்னை நீக்கி வருமானத்தை தரும் கற்பூரவல்லி செடி! வேறென்ன நன்மைகள்? முழு விவரம்
Oct 31, 2023, 02:46 PM IST
கடன் பிரச்னையை நீக்கி, வருமானத்தை அதிகரிக்க உதவும் வல்லமை கற்பூரவல்லி செடிக்கு உள்ளதாக வாஸ்து முறைப்படி கூறப்படுகிறது. கற்பூரவில்லி செடிகள் கொண்டிருக்கும் தெய்வீக நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
குடும்பத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமலும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் பல்வேறு பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் நாம் அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம். அந்த வகையில் கடன் பிரச்னைகளை தீர்த்து, சில ஆன்மிக நன்மைகளை தரும் வல்லமை கொண்ட செடிகள் சில உள்ளன.
சமீபத்திய புகைப்படம்
வாஸ்து முறைப்படி சில தெய்வீக செடிகளை நாம் வீட்டில் வளர்த்தால் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம். பொதுவாக துளசி அனைவரும் வளர்க்கும் ஆன்மிக நன்மையை தரும் செடியாகவே இருந்து வருகிறது. துளசியை வடகிழக்கு மூலையில் வளர்த்தால் வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகுவதுடன் தெய்வீக அருளும் பெறப்படும்.
ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ குணங்கள் கொண்ட செடியாக இருந்து வரும் கற்பூரவல்லி மகாலட்சுமி அம்சம் நிறைந்தாக உள்ளது. மிகவும் வாசனை கொண்ட கற்பூரவள்ளி செடி வீட்டில் செல்வத்தை பெருகும் வல்லமை கொண்ட செடியாக உள்ளது. கடன் பிரச்னை தீர்க்கும் செடிகளில் முக்கியமானதாக கற்பூரவல்லி உள்ளது.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை வெளியேற்றி, வருமானத்தை அதிகரித்து சேமிப்பையும் அதிகரிக்க செய்யும்.
சிறிய மூங்கில் செடி வளர்ப்பதன் மூலம் புகழ், செல்வம் அதிகரிக்கும். மகாலட்சுமி அம்சம் கொண்டதாக இருக்கும் செம்பருத்தி செடி நேர்மறையான சிந்தனையை உருவாக்கும். மாதுளை மரங்கள் வீட்டில் மகாலட்சுமியின் அம்சத்தை அதிகரிக்கும்.
குறிப்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரங்களில் வழிபாடு பல்வேறு நன்மைகளை வழிவகுக்கும். நவகிரகத்தில் சுக்கிரனுக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்,கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கி மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்படும். குடும்பம் மகிழ்ச்சியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தாலே வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கும்.
கடன் தொல்லை நீங்குவதற்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபட வேண்டும். நரசிம்மரின் கோலமான எதை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், திருஷ்டி பிரச்னைகள் நீங்கும் என வாஸ்து முறையில் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்