எந்த கிழமையில் பிறந்தால் எந்த பலன்? சூரியனாக பிரகாசிக்கப் போவது யார்?
Oct 21, 2024, 03:32 PM IST
நாம் பிறக்கும் மற்றும் நேரம் ஆகியவற்றை வைத்து தான் நமது குணாதிசியங்களையும், பலன்களையும் ஜோதிடர்கள் கணிப்பார்கள். ஆனால் நாம் பிறக்கும் கிழமையை பொருத்தும் நமக்கான பலன்கள் அமைகின்றன.
நாம் பிறக்கும் மற்றும் நேரம் ஆகியவற்றை வைத்து தான் நமது குணாதிசியங்களையும், பலன்களையும் ஜோதிடர்கள் கணிப்பார்கள். ஆனால் நாம் பிறக்கும் கிழமையை பொருத்தும் நமக்கான பலன்கள் அமைகின்றன. நாம் எந்த கிழமையில் பிறக்கிறோமோ அதன் அடிப்படையில் நமது குணம், எண்ணம், வாழ்க்கை முறை ஆகியவை அமைகின்றன. ஒவ்வொரு கிழமையும் ஒரு விதமான பலன்களை கொண்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் நமது குணங்களும் மாறுகின்றன. இது குறித்து பிரபல ஜோதிடர் ஆல்ப்ஸ் சம்பத் சுப்பிரமணி கூறிய நற்பலன்கள் மற்றும் குணாதிசியங்கள் குறித்து இங்கு காண்போம். டிவைன் உட்ஸ் என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் கிழமைகளில் பிறக்கும் பலன்களை குறித்து பேசியுள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
சூரியனாக ஜொலிக்கும் ஞாயிற்றுக் கிழமை
ஞாயிற்றுக் கிழமையின் அதிபதி சூரியன் ஆவார். அதன் காரணத்தினால் இந்த கிழமைகளில் பிறப்பவர்கள் பெரிய பதவியில் அதாவது உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் பிறந்தவர்கள் எப்போதும் அதிக பிடிவாதம் உள்ளவர்களாகாவே இருப்பார்கள். மேலும் இவர்கள் அதிகம் புகழ்ச்சியை விரும்புபவர்களாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமைப் பண்பு சிறந்து விளங்கும். சமுதாயத்தில் அங்கீக்காரத்தினை விரும்புவர்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஜொலிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
சந்தேகம் அதிகம் உள்ள திங்கள் கிழமை
திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் கடல் கடந்து சென்று வேலை செய்யும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடனும், துடிப்பாகவும் இருப்பார்கள். தானம், தர்மம் செய்வதில் சிறந்தவன். எளிமையாக காயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். வேகமாக வேலை செய்யும் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். யாரையும் முழுதாக சந்தேகிக்கும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
வீர தீரமான செவ்வாய்க் கிழமை
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வீர, தீர செயல்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். காவல் துறை, இராணுவத் துறைகளில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். துணிவான செயல்களை செய்பவர்களாக இருப்பார். அதிகமாக பாசத்திற்கு அடிமையாக இருப்பார்கள். ரகசியங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
கணக்கு போடும் புதன் கிழமை
புதன் கிழமையில் பிறந்தவர்கள் அனைத்திலும் மிகச் சரியாக இருப்பார்கள். குறிப்பாக கணக்கு போட்டு வாழ்க்கை நடத்துபவர்களாக இருப்பார்கள். ஊடகத்துறையில் புதன் கிழமையில் இருப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். சிறந்த அறிவுத்திறன் உடையவர்களாக இருப்பவர்கள். நண்பர்களோடு கவனமாக பழக வேண்டும்.
மதிப்பு மிக்க வியாழன் கிழமை
வியாழன் கிழமைகளில் பிறந்தவர்கள் அனைவரிடமும் மிகுந்த மதிப்பு மற்றும் மரியாதையை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். குடும்ப பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆன்மிக சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதிக கோபம் வருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு மிகவும் சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.
கோடீஸ்வராக்கும் வெள்ளக் கிழமை
வெள்ளிக் கிழமைகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரப் பார்வை இருக்கும். மிகுந்த வசதியான வாழ்வை வாழ வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பார்கள். அதிக பொருளாதார வசதி பெறவும் வாய்ப்பு உள்ளது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருப்பார்கள்.
கடின உழைப்பாளி சனிக்கிழமை
சனிக்கிழமை பிறந்தவர்கள் அதிக கடின உழைப்பாளர்களாக இருப்பார்கள். அனைவரையும் சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள். மிகவும் மெதுவாக இயங்கும் நபராக இருப்பார்கள். உளவுத்துறை, புலனாய்வுத் துறை போன்ற பணிகளில் இருப்பார்கள். அதிகம் அனுபவம் உடைவார்களாக இருப்பார்கள்.
டாபிக்ஸ்