(5 / 6)பின்னர் அவர் ஞானமுள்ள பண்டிதர்களிடமிருந்து தனது பாவம் குறித்து அறிய விரும்பினார். பின்னர் பண்டிதர்கள் அவரிடம் ' இது தவறு. இதனை பிரம்ம கொலை என்பர்' என்று வேதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், அப்போது, இறுதிச்சடங்கின் கடைசி படிகளில் ஒன்றான, பிராமண விருந்தில் ’சத்ரியன் வீட்டில் நாங்கள் சாப்பிட முடியாது’ என்று பிராமணர்களும் பண்டிதர்களும் கூறினர். இதைக் கேட்ட சத்திரியர், 'பிரம்ம கொலை பாவத்தை' நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் உண்டு என்று கேட்டார்?பிறகு பண்டிதர்கள் கலந்து ஆலோசித்து, சாவன் மாதம் என்று அழைக்கப்படும், தமிழ் மாதத்தில் வரும் ஆடி மாதத்தில், கிருஷ்ணபட்சத்தின் ஏகாதசி நாளன்று விஷ்ணுவை வழிபட்டு, பிராமணர்களுக்கு உணவு அளித்து தானம் செய்யாவிட்டால், அவர் பிரம்ம வத பாவத்தில் இருந்து விடுபட முடியாது என்று கூறினார்கள்.