’மகரம் ராசிக்கு ஆளுமையை கொண்டு வரும் சுக்கிரனின் அனபா யோகம்’ டிசம்பர் மாத ராசிபலன்கள்!
Nov 25, 2024, 06:42 PM IST
லாப ஸ்தானத்தில் சூரியன் - புதன் சேர்க்கையும், 12ஆம் வீட்டு சுக்கிரனால் உண்டாகும் அனபா யோகமும் இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி, சொத்து விருத்தி, வண்டி வாகன சேர்க்கை, மரியாதை உள்ளிட்ட நன்மைகளை கொண்டு வரும்.
மகரம் ராசியினருக்கான டிசம்பர் மாத பலன்கள்:-
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர லக்னத்தினர் பேச்சில் வல்லவர்கள். நிதானமாகவும் தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசத் தெரிந்த இவர்கள் எதையும் எளிதில் மனதில் பதிய வைத்துவிடுவர். எடுத்த காரியத்தை விடாமுயற்சியால் முடிப்பதில் வல்லவர்கள். வீண் செலவுகள் செய்வதில் நாட்டமில்லாத இவர்களிடம் ஓரளவு பணம் புழங்கும்
சமீபத்திய புகைப்படம்
மகரம் ராசிக்கு ஏழரை சனி பாதிப்பு முடிந்து கொண்டு இருக்கும் நிலையில் உடலும், மனதும் உற்சாகம் நிறைந்து இருக்கும். குடும்பத்திலும், சமூகத்திலும் அந்தஸ்து, மரியாதை உயரும். பேச்சுவார்த்தைகளில் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். ராகு சனி நட்சத்திர பரிவர்தனை யோகம் பெறுவதால் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. லாப ஸ்தானத்தில் சூரியன் - புதன் சேர்க்கையும், 12ஆம் வீட்டு சுக்கிரனால் உண்டாகும் அனபா யோகமும் இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி, சொத்து விருத்தி, வண்டி வாகன சேர்க்கை, மரியாதை உள்ளிட்ட நன்மைகளை கொண்டு வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளால் இருந்து வந்த பிரச்னைகள் அடங்கும். டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வரை மகரம் ராசியில் இருக்கும் சுக்கிரன், பின்னர் இரண்டாம் வீடான கும்ப ராசிக்கு செல்ல உள்ளார். ராசிக்கு 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரிய சுக்கிரன் ஆனவர் தொழில்காரகன் ஆவார்.
இதனால் உங்கள் மனம் உற்சாகத்தில் திளைக்கும். ஆடல், பாடல், பொழுது போக்கு அம்சங்களின் மீது மோகம் கூடும். காதல் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயத்தில் காதல் தொடர்பான விவகாரங்களில் மிக கவனமாக செயல்படுவது முக்கியம். ஏழரை சனி பாதிப்பு விலகும் காலம் என்பதால் நன்மைகள் கிடைக்கும். புதிய சிந்தனைகள் தோன்றி சந்தோஷம் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.