தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala Ayyappan: ஐயனே… அப்பனே… என்பதே ஐயப்பன்!

Sabarimala Ayyappan: ஐயனே… அப்பனே… என்பதே ஐயப்பன்!

Dec 13, 2022, 01:37 PM IST

google News
பந்தளராஜாவின் வேண்டுதல் வார்த்தைகளே பின்னால் ஐயப்பன் என்ற பெயராக மாறியது
பந்தளராஜாவின் வேண்டுதல் வார்த்தைகளே பின்னால் ஐயப்பன் என்ற பெயராக மாறியது

பந்தளராஜாவின் வேண்டுதல் வார்த்தைகளே பின்னால் ஐயப்பன் என்ற பெயராக மாறியது

உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகச் சபரிமலை ஐயப்பன் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு வருகின்றனர். பிரம்மச்சாரியாக மலை உச்சியில் காட்சி தரும் சபரிமலை ஐயப்பனைக் காண கார்த்திகை மாதம் உகந்த மாதமாகத் திகழ்கிறது.

சமீபத்திய புகைப்படம்

'நம்பிக்கையா இருக்க.. நல்லது நடக்கும்.. அர்ப்பணிப்பு முக்கியம்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 23, 2024 05:00 AM

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

மண்டல பூஜை தொடங்கி மகரஜோதி வரை ஏராளமான பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் சபரிமலையில் இருக்கும். சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியின் சில முக்கிய தகவல்கள் குறித்து இங்கே காணலாம்.

சபரிமலையில் பரசுராமர் முதன் முதலில் சாஸ்தா கோயிலை எழுப்பினார். அப்போது தர்ம சாஸ்தாவின் விக்ரகத்தை அவர் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

மகிழ்ச்சி சம்காரம் முடிந்ததும் தனது அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஐயப்பன். பின்னர் யோக பட்டம் தரித்து சிம் முத்திரை காட்டி தவக்கோளத்தில் ஐயப்பன் அமர்ந்தார். பின்னர் தவத்தின் நிறைவாகப் பரசுராமர் பிரதிஷ்டை செய்து வந்த தர்ம சாஸ்தா விக்கிரகத்தில் ஐக்கியமானார். அதன் பின்னாடி ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஜின் முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து சித்தர் போல் அமர்ந்திருக்கும் ஐயப்பன் முதலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. முன்பிருந்த காலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த தர்மசாஸ்தாவின் விக்ரகத்திற்கு மகர சங்கராந்தி அன்று ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு செய்யப்பட்டன.

தர்மசாஸ்தாவின் விக்ரகத்தில் ஐயப்பன் ஐக்கியமான பிறகு மண்டல பூஜைகள், மகர விளக்குப் பூஜைகள், மாத பூஜைகள் என வழிபாடுகள் தொடங்கப்பட்டன. மகர சங்கராந்தி தரிசனம் இன்றுவரை சிறப்பாகச் சபரிமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐயப்பன் என்றதும் ஜின் முத்திரை காட்டி அருள் பாலிக்கும் வடிவமே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ஐயப்பன் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து முத்திரைகளைக் காட்டி அருள் பாலித்து வருகிறார்.

பூதநாதோ பாக்யானம், தியானித்த ஆசனத்தில் அமர்ந்து அபய சின்முத்திரை காட்டி அருள் பாலிக்கிறார். கிருக நாரீய பீட ஆசனத்தில் அமர்ந்து யோக பிராண முத்திரை காட்டி அருள் பாலிக்கிறார்.

குதபாத சிரேஸ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடு அருள் பாலிக்கிறார். அஷ்ட கோணச் சாஸ்தா பீடத்தில் யோகா பத்திராசனத்தில் வீச்சிருந்து அருள் பாலிக்கிறார்.

ஐயப்பன் என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது ஹரிஹர புத்திரன் ஆகிய மணிகண்டன் என்பதே இவரது பெயர். பந்தளராஜன் மகனாக மணிகண்டன் வளர்ந்து வந்தார். மணிகண்டனின் அவதார நோக்கம் நிறைவு பெற்ற காரணத்தினால் பந்தள ராஜாவை விட்டு அவர் பிரிய வேண்டி இருந்தது.

கண்கலங்கி நின்ற தனது தந்தையிடம் அவர், இனிமேல் நான் வனப்பகுதியில் வாசம் செய்யப் போகிறேன். ஒருவேளை என்னை நீங்கள் காண விரும்பினால் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழி பகுதியை நீங்கள் வரவேண்டும். வழி தெரியாமல் நீங்கள் தடுமாறினால் உங்களுக்கு கருடன் வழி காட்டுவார் என்று சொல்லிவிட்டு மணிகண்டன் விடைபெற்றார்.

பின்னர் தனது மகனான மணிகண்டனை காண்பதற்கு பந்தளராஜன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். கல்களையும், முள்களையும் கடந்து செல்லும் பொழுது அவர் மிகவும் சிரமப்பட்டார். சிரமத்தின் காரணமாக ஐயனே, அப்பனே என்று கூறிக்கொண்டு மணிகண்டனை நோக்கிச் சென்றார். அந்த வார்த்தையை காலப்போக்கில் ஐயப்பன் என்று மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி