தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி.. இளைஞர் கைது!

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி.. இளைஞர் கைது!

Divya Sekar HT Tamil
Mar 14, 2023 10:43 AM IST

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி.

ட்ரெண்டிங் செய்திகள்

அதை நம்பிய ரகு, தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.12 லட்சத்தை கார்த்திகேயனிடம் கொடுத்தார். மேலும் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை வாங்கி கொடுத்தார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன், சொன்னது போல் ஒருவருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டு தமைறைவாகிவிட்டார். இதுபற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரகு புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வந்தார்.

இ்ந்தநிலையில் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தார். அவரிடம் விசாரித்த போது இதுபோல் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் வரை பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைதான கார்த்திகேயனை சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்