தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suicide : மனைவிக்கு தூக்கு கயிறுடன் செல்ஃபி அனுப்பிய கணவர்.. பகீர் சம்பவம்!

Suicide : மனைவிக்கு தூக்கு கயிறுடன் செல்ஃபி அனுப்பிய கணவர்.. பகீர் சம்பவம்!

Divya Sekar HT Tamil
Feb 12, 2023 11:57 AM IST

செய்யாறு அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை
தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

செய்யாறு தாலுகா தூசி அடுத்த கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலமுருகன். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சுருட்டல் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ரஞ்சிதா வழக்கறிஞராக உள்ளார். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. எனவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் பாலமுருகன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஞ்சிதா, சுருட்டலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, பாலமுருகன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய நிலையில் மனைவி ரஞ்சிதாவின் செல்போனுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா என்ன செய்வது என்று அறியாமல் பதறிபோய் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்து பதறியப்படி பாலமுருகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவிக்கு கணவர் புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்