தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மத்திய பல்கலை.யில் பட்டப்படிப்புகள் - நுழைவுத்தேர்வு குறித்த விவரங்கள் என்ன?

மத்திய பல்கலை.யில் பட்டப்படிப்புகள் - நுழைவுத்தேர்வு குறித்த விவரங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Feb 11, 2023 12:27 PM IST

Central University Entrance Exam: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 'மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி-யுஜி)' அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை உள்ளே தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை இரவு முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 12ம் தேதி கடைசி நாளாகும். 

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சியுஇடி-யுஜி தேர்வு வரும் மே 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 12ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விவரம் ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படும். 

தேர்வறை நுழைவுச்சீட்டை இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வலைதளத்திலிருந்து மே இரண்டாவது வாரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு நாட்களில் 3 பகுதிகளாக தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

யுஜிசி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையில் அல்லாமல், சியுஇடி நுழைவுத் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்