தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா? – விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா? – விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

Priyadarshini R HT Tamil
Jan 17, 2023 12:20 PM IST

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சுகாதார துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் 

பணி – Auxiliary nurse midwife 

காலியிடங்கள் – 183 

சம்பளம் – மாதம் ரூ.14,000

தகுதி – பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஏஎன்எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

பணி – Pharmasist 

காலியிடங்கள் – 4  

சம்பளம் – மாதம் ரூ.15,000

தகுதி – பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருந்தாளுனர் பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 

 

பணி – lab technician 

காலியிடங்கள் – 19

சம்பளம் – மாதம் ரூ.13,000

தகுதி – பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

 

பணி – X-Ray Technician  

காலியிடங்கள் – 7

சம்பளம் – மாதம் ரூ.12,000

தகுதி – இரண்டு ஆண்டு எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

 

பணி – operation theatre assistant 

காலியிடங்கள் – 5

சம்பளம் – மாதம் ரூ. 8,400 

தகுதி –  ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி டிப்ளமோ, அறுவைசிகிச்சை டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  

 

பணி – ophthalmic assistant 

காலியிடங்கள் – 3 

சம்பளம் – மாதம் ரூ.12,000

தகுதி – கண் மருத்துவ உதவியாளர்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை 

தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வுக்கு வருவோர் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். மேற்கூறியுள்ள படிப்புகளை தமிழ்நாடு மருத்துவகல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

www.chennaicorporation.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு வரும் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

The Member Secretary, 

Chennai city urban Health Mission, 

Public Health Department, 

Ripon Buildings,

Chennai – 600003. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்