Encounter: ஆம்ஸ்ராங் கொலை! திருவேங்கடம் என்கவுண்டர்! ஒரே குரலில் பேசும் ஈபிஎஸ், அண்ணாமலை, சீமான்! விளாசும் வன்னி அரசு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Encounter: ஆம்ஸ்ராங் கொலை! திருவேங்கடம் என்கவுண்டர்! ஒரே குரலில் பேசும் ஈபிஎஸ், அண்ணாமலை, சீமான்! விளாசும் வன்னி அரசு!

Encounter: ஆம்ஸ்ராங் கொலை! திருவேங்கடம் என்கவுண்டர்! ஒரே குரலில் பேசும் ஈபிஎஸ், அண்ணாமலை, சீமான்! விளாசும் வன்னி அரசு!

Kathiravan V HT Tamil
Jul 14, 2024 10:25 PM IST

Rowdy Thiruvengadam Encounter: "தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”

ஆம்ஸ்ராங் கொலை! திருவேங்கடம் என்கவுண்டர்! ஒரே குரலில் பேசும் ஈபிஎஸ், அண்ணாமலை, சீமான்! விளாசும் வன்னி அரசு!
ஆம்ஸ்ராங் கொலை! திருவேங்கடம் என்கவுண்டர்! ஒரே குரலில் பேசும் ஈபிஎஸ், அண்ணாமலை, சீமான்! விளாசும் வன்னி அரசு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் சுடப்பட்டதாகவும், மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்வீட் செய்து உள்ளார்.

அதில், ”ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடி சம்பந்தப்பட்டுள்ள கொலையாளி திருவேங்கடம் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளான்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களும் நாதக திரு.சீமான் அவர்களும் ஒரே மாதிரி ஒரே குரலில் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அதாவது, கொலையாளி திருவேங்கடம் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி நேரடி தொடர்பில் உள்ள கொலையாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தலித் விரோதப்போக்காகும்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவதை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என பதிவிட்டு உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

குற்றவாளிகள் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோ மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அருண் ஐபிஎஸ், ரவுடிசத்தை கடுப்படுத்துவதே முதல் வேலை. ரவுடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் எங்கள் முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.