IPS Transfer : ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி.. சென்னை காவல் ஆணையர் மாற்றம்! புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!
IPS Transfer : சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
IPS Transfer : சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார், புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலை
முன்னதாக, தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மாநிலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆவடி காவல் ஆணையர் தலைமையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. நினைவு மண்டபம், மருத்துவமனை அனுப்பினால் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.
அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது. 2023ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் 63 கொலை நடந்து இருந்தது. ஆனால் இதுவரை 58 கொலைகள் மட்டுமே நடைபெற்று உள்ளது என தெரிவித்தார்.
சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, மூன்று மணி நேரத்தில் கிடைத்த தகவல்களை வைத்து குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம். அவர்கள் கூறுவது குறித்து நிச்சயம் விசாரிப்போம். இது அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதி. கொலை தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றோம் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்