தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tneb: போராட்டத்தில் ஈடுபட்டால் அவ்வளவு தான் ..ஊழியர்களுக்கு மின்வாரியம் கடும் எச்சரிக்கை

TNEB: போராட்டத்தில் ஈடுபட்டால் அவ்வளவு தான் ..ஊழியர்களுக்கு மின்வாரியம் கடும் எச்சரிக்கை

Karthikeyan S HT Tamil
Jun 21, 2023 10:57 AM IST

மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம், சென்னை.
தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம், சென்னை.

ட்ரெண்டிங் செய்திகள்

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கைகள் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் பேச்சுவார்த்தை என்ற நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருதப்படும் என்றும் இதை விடுமுறை நாளில் கழித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்