தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tirunelveli : பெண் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய இளைஞர்.. சப்-இன்ஸ்பெக்டரையும் தாக்கியதால் பரபரப்பு!

Tirunelveli : பெண் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய இளைஞர்.. சப்-இன்ஸ்பெக்டரையும் தாக்கியதால் பரபரப்பு!

Divya Sekar HT Tamil
Jun 23, 2023 11:18 AM IST

திருநெல்வேலியில் ரயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்ய சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை இளைஞர் அரிவாளால் வெட்டினார்.சப்-இன்ஸ்பெக்டரையும் தாக்கியதால். பரபரப்பு ஏற்பட்டது.

ரயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய விவகாரம்
ரயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய விவகாரம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் நேற்று (ஜூன் 22) அதிகாலை விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு பேர், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அந்த கும்பல், கேட் கீப்பர் அறையில் இருந்த தொலைபேசிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் பெட்ரோல் பாட்டிலை அறையில் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர். நல்வாய்ப்பாக தீ பிடிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நாங்குநேரி, மூன்றடைப்பு மூலைக்கரைப்பட்டி போலீசாரும் மர்மநபர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி. மூலைக்கரைப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் சக்தி நடரான் மற்றும் போலீசாருக்கு மர்மநபர் குறித்த விவரம் தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (23) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவரை கைது செய்வதற்காக போலீசார் அங்கு சென்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியில் வைத்து பிச்சைக்கண்ணுவை போலீசார் பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பிச்சைக்கண்ணு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் இன்ஸ் பெக்டர் செல்வி. சப்-இன்ஸ் பெக்டர் சக்தி நடராஜன் ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. எனினும் சுதாரித்துக் கொண்ட சக போலீசார் பிச்சைக்கண்ணுவை மடக்கிப்பிடித்தனர். இதில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார்செய்யப்பட் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்கண்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்