தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M.k.stalin: மாநகாராட்சி பள்ளிக்கு நிதி வழங்கிய வியாபாரியை நேரில் பாராட்டிய முதல்வர்

M.K.Stalin: மாநகாராட்சி பள்ளிக்கு நிதி வழங்கிய வியாபாரியை நேரில் பாராட்டிய முதல்வர்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 17, 2023 01:18 PM IST

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் அவர்கள் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார்.

பள்ளிக்கு நிதி உதவி வழங்கியவரை பாராட்டிய முதல்வர்
பள்ளிக்கு நிதி உதவி வழங்கியவரை பாராட்டிய முதல்வர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2023) மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையையும் வழங்கி சிறப்பித்தார்.

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் அவர்கள் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். 

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரன் அவர்களைதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்